பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242


242 திருநாடு அடையும் பேற்றினையும் அருளுவான் என்று கூறுவர் ஆசிரியர் இப் பாசுரத்தில். இன்னெரு சிறிய பாடலிலும் திருவேங்கடமுடை யானின் திருப்பாதப் பெருமை பேசப்படுகின்றது. "வேத இனத்தரும் விமலன்என நாதன் வேங்கட நாயகன் பாதம் அல்லது பற்றுமே ஏதம் அற்றவர் இதயமே. (வேதன்-நான்முகன்; விமலன்-குற்றம் நீங்கியவன்; ஏதம் அற்றவர்-குற்றம் நீங்கியவர்.) குற்றமற்றவர்கள் சீகிவாசனது திருப்பாதத்தைத் தவிர வேருென்றையும் சரணமாக அடையார். இதில் வேதனைத் தரும் விமலன் என்பதால் பரத்துவமும், ‘என் நாதன்' என்பதால் செளலப்பியமும் (விபவம்?), வேங்கட நாயகன்’ என்பதால் அர்ச்சையும் கூறப் பெற் றிருப்பதைக் கண்டு மகிழ்க. - 2莎 笼2姆 ஆசிரியரின் வைணவப் பற்று இந்த நூலில் முத்தமிழ்க் கவியின் வைணவப் பற்றினைப் பரக்கக் காணலாம். தமிழகத்தில் சைவ வைணவ வெறிபிடித்த காலம் ஒன்றுண்டு. அக்காலத்தில் வாழ்ந்த கவிஞர்கள் ஒருவர் கடவுளே ஒருவர் தாழ்த்திக் கூறும் போக்கினை ஒருமரபாகவே கையாண்டு வந்தனர். ஒருவர் சிவனைப் பழித்துக் கூறினல் மற்றவர் திருமாலை இழித்துக் கூறுவார்." அத்தகைய போக்கு நம் ஆசிரிய 220. 1 margib-87. 221. "வாடியோட” என்ற திருவரங்கக் கலம்பகச் செய்யுளும் (39), "கருடனேட" என்ற திருவருணைக் கலம்பகச் செய்யுளும் ( ) சண்டு அறியத்தக்கவை,