பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

251


25; மனத்தில் பக்தி கிளர்ந்தெழச் செய்கின்றன. எடுத்துக் காட்டாக, இந்நூலிலுள்ள ஒரு பாடலைக் காட்டுவேன். 'உண்மையாக உன்னடிக்கண் ஒருவிலன் புளுற்றிடத் திண்மையாக அருளுவாய்கொல் செய்யசேட வரையனே! வண்மைமேவு கீரவாரி மலையிஞன்ம தித்தமு(து) எண்மைtங்க அமரருக்கெ டுத்தளித்த குரிசிலே. ' இந்தப் பாடலை படித்த பின்னர் திருமழிசையாரின் பாசுரம் ஒன்றினைக் காண்போம். 'கடைந்தபாற் கடற்கிடந்து காலநேமி யைக்கடிந்து உடைந்தவாலி தன்பினுக்கு உதவவங் திராமளுய் மிடைந்தஏழ் மரங்களும் அடங்கவெய்து, வேங்கடம் அடைந்தமால பாதமே அடைந்துநாளும் உய்மினே.” “ இந்தப் பாசுரமும் மேற்காட்டிய பாடலும் ஒரே சந்தந் தில் இருப்பதைக் காணலாம். முன்னதில் ஆசிரியர் சேடமலையில் வாழும் எம்பெருமானின் திருவடிகளில் அன்பு செலுத்தும் மனம் அருளுமாறு அவனே வேண்டு கின்ருர். பின்னதில் ஆழ்வார் வேங்கடத்து அண்ணலின் திருப்பாதத்தை ஆடையும் பேறு தனக்குக் கிட்டுவதற்கு 239. பாடல்-11 240. திருச்சந்-81