பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256


256 அறிவோம். அத்தகைய பாணியை இந்த ஆசிரியர் பாடல்களிலும் கண்டு மகிழலாம். 'பரமபாகவதர் துயரெலாங் தவிர்க்கும் பண்ணவ! விண்ணவர் இறையே: பிரமனப் பூத்த பதுமகன் பைா! பேசரு மறைமுடிப் பொருளே! மருவலர் சோலை புடையுடுத் தோங்கு மாசுண மால்வரை யரசே! இருமனப் பெண்டிர் மயற்கடல் கவிழா தெடுக்குதல் நின்கடன் அன்றே. * என்ற இந்த ஆசிரியரின் பாடல், "கொண்டல் வண்ணு குடக்கூத்தா வினையேன் கண்ணு கண்ணுஎன் அண்டவாளு என்றென்னை ஆளக் கூப்பிட் டழைத்தக்கால் விண்தன் மேல்தான் மண்மேல்தான் விரிநீர்க் கடல்தான் மற்றுத்தான் தொண்ட னேன்உன் கழல்கான ஒருநாள் வந்து தோன்ருயே.'" என்பன போன்ற ஆழ்வார் பாடல்களைப்போல் எம்பெருமானுடன் நேரில் பேசுவதுபோல் அமைந்துள் ளதைக் காண்க. எம்பெருமானுடைய அவதாரங்கள் எண்ணிறந்தன என்று தத்துவத்திரயம் பேசும்." ஆயினும், அவதாரங் 257, பாடல்.28 . 258. திருவாய்-8.5:6 - 259. தத்துவத் திரயம்-ஈசுவரப் பிரகரணம்-48