பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258


258 தீதறு மறைகள் வாழ்க! திகழ்தருங் கொண்டல் வாழ்க; கோதறும் அரசர் வாழ்க! குவலயத் துயிர்கள் வாழ்க.' " என்ற வாழ்த்துப் பாடலுடன் நூல் இனிது நிறைவு பெறுகின்றது. 5. திருவேங்கட தலபுராணம் அன்பர்களே, இனி திருவேங்கட தலபுராணம் பற்றிச் சில செய்திகள் பகர்வேன். இது திருமலை என்று பெயர்பெற்று விளங்கும் தெய்வத்தலம்பற்றிய பழைய வரலாறுகளைக் கூறும் நூல். இது வடமொழியிலுள்ள பதினெண் புராணங்களைப்போல் சருக்கம் முதலிய ஐந்து இலக்கணங்களே உடையது அன்று; புண்ணியத் தலங் களின் மான்மியங்களைத் தெரிவிக்கும் தலமான்மிய நூல் வரிசையைச் சார்ந்தது இது. இத்தகைய தலபுராணங்கள் கி. பி. பதினரும் நூற்ருண்டு தொடங்கித் தமிழ்ப் புலவர்கள் பலரால் பல சைவ வைணவ தலங்கட்குப் பாடப் பெற்றுள்ளன என்பதை இலக்கிய வரலாறு கற்போர் நன்கு அறிவர். மகாவித்துவான் திரிசிரபுரம் மீனட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் மட்டிலும் பதினறு தலபுராணங்களை இயற்றியுள்ளனர் என்பதை ஈண்டு நாம் அறியத்தக்கது. அந்த முறையில் இது திருவேங் கடம் என்ற பழைய புண்ணிய தலத்திற்கு உரியதாகத் தமிழ்ச் செய்யுட்கள்ால் இயன்றது. 261, பாடல்-101