பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260


260 என்ற பாடலில் பிரமாண்ட புராணத்தின் பெயர் வருதல் காண்க. இங்கனம் இந்நூலில் பவிஷ்யோத்தர காண்டம், பிரம்மோத்திரகாண்டம், வராகம், வாமனம், பதுமம், காந்தம், மார்க்கண்டம் முதலிய புராணப் பெயர்கள் காணப்பெறுகின்றன. 'பெரிய திருவடி கிரீடாசலம் கொண்டுவந்த அத்தி யாயத்தில் உள்ள, 'ஏற்றுசீர் வராக மெனும்புரா ணத்தில் இயம்புமிக் காதையைப் புவிமேல் சாற்றுவோர் மனத்தில் உவப்புறக் கேட்போர் சருவசித் திகளையும் அடைந்து மாற்றரும் எழிலார் சதுர்த்தச புவன மருவுவோர் யாவரும் புகழ்ந்து போற்றமாதவர்க்கும் அறிவதற் கரிதாம் புராதனன் உலகமே புகுவார். * என்ற பாடலில் வராக புராணம் நுவலப் பெற்றிருப் பதைக் காண்க. இந்நூலே நல்ல முறையில் பதிப்பித்த பெருமை திரு. தி. பொ. பழகியப்ப பிள்ளை அவர்களைச் சாரும். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தாரால் இந்நூல் 1949 இல் வெளியிடப் பெற்றுள்ளது. இதுவே திரு. பிள்ளையவர் களால் உரைநடையில் எழுதப் பெற்றும் வெளியிடப் பெற்றுள்ளது. 263. செய்யுள்-13.