பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

265


265 அழைக்கின்றனர் ஆய மங்கையர். இந்த ஆசிரியரின் பாடலில் நோன்பை இயற்றுவோம் என்று வெளிப் படையாகவே கூறி அழைக்கின்றனர் ஆய்க்குலத்துச் சிறுமியர். இந்த நூலின் இன்ளுெரு பாடலைக் காண்போம். "சிந்தை யிருளைத் தினமும் அகற்றுதற்கா வந்த விளக்கே வளமார் தவக்கொடியே! கந்தலிலா மாறன் கவிற்றுதிரு வாய்மொழிபோல் முந்தையவா னக்தம் முகிழ்க்கும் கிலேயத்துச் சுந்தரனைப் போற்றித் துயர்க்கு விடைவழங்கி அந்தமிலா இன்பம் அடையா துறங்குதியோ? சந்தமுறு நோன்பில் தகவார் சுவையேற்றப் பைங்தொடியே! மெல்லப் பரிந்தெழுவாய்; எம்பாவாய்' இப்பாடலில் குறிப்பிடப்பெறுகிறவள் அடியார்கள் மரபில் தோன்றிய வளமார் தவக்கொடி. நாடோறும் சிந்தையில் திரளும் அறியாமை என்ற இருளைப் போக்கு வதற்கென்றே தோன்றிய விளக்குப் போன்றவள். இவளைக் குழுவாக வந்து எழுப்புகின்றனர் ஆயர் மங்கையர். திருப்பள்ளி எழுச்சி யில் ஒரு பாடலைக் காட்டு வேன். தொண்டரடிப் பொடியாழ்வார், மணிவாசகப் பெருமான் அவரவர் போற்றும் எம்பெருமான்களை எழுப்புவதாகத் திருப்பள்ளி எழுச்சிகளைப் பாடி யுள்ளதை நாம் அறிவோம். அந்நிய ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டு அந்த அடிமைத்தன்மையை அறியாது உறங்கிய நிலையில் கிடந்த நம் நாட்டு மக்களை எழுப்பு வதுபோல் அமைந்த பாரதியாரின் ‘பாரதமாதா திருப் பள்ளி எழுச்சி யும் நம் அறிந்த ஒன்றே. அதே பாணியில் திருவேங்கடவனத் துயிலெழச் செய்கின்ருர் நம் இராமராசன், སྡིམ་༣