பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

267


Žé? 'உள்ளத்தி லுள்ளும் தொறுங்களிப் போங்கி யுறுதுயர்செய் கள்ளத்தை நீக்கிடும் தேன்கூடு கண்டனம்; காதலொடு தெள்ளத் தெளிந்த கலமரு ளாழ்வார் செழுந்தமிழில் மெள்ளச் செழித்துப் பொலிவுறு வேங்கட வெற்பிடத்தே." திருவேங்கடமலையில் ஒரு தேன் கூடு தென்படு கின்றது. அது பக்தர்கள் பாடும் நம்மாழ்வாரின் செழுந் தமிழால் மெல்லச் செழித்துச் சுவையும் பொலிவும் பெற்றுத் திகழ்கின்றது. அத் தேனிருல் நம் உள்ளத்தில் எழும் களிப்பின் காரணமாக விளையும் துயராகிய கள்ளத்தையும் போக்கும் என்கின்ருர் ஆசிரியர். இந்த அலங்காரத்தில் மற்ருெரு பாடல்: "உனக்கும் எனக்கும் இடையே மறைக்கும் உளத்திரையைக் கனக்கும் கருணைக் கரத்தால் விலக்கிக் கனிந்தருள்க; சினக்கும் இரணியன் மார்பைப் பிளந்து, தெளிந்தமறை தனக்கும் புவிக்கும் உயிர்ப்பருள் வேங்கடத் தற்பரனே.” இதில் எம்பெருமானுக்கும் உயிருக்கும் இடையில் வினவயத்தால் தோன்றி மறைக்கும் மனத்திரையை கனக்கும் கருணைக் கரத்தால் (அபயகரம்) கனிந்து நீக்கி யருளுமாறு வேண்டுகின்ருர் ஆசிரியர். இரணியன் மார்பைப் பிளந்து நான்மறைக்கும் புவியிலுள்ளோ