பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

275


275 பெயர்க்கப்பெற்றது இத்தொகுப்பு நூல். ஆகவே, இது வழிநூல் வகையைச் சார்கின்றது. இவற்றுள் முதல் நூல் தமிழ் திருப்பள்ளி எழுச்சி மரபினேத் தழுவியதாகும். நம் நாடு விடுதலைப் போராட் டத்தில் ஈடுபட்டிருந்த காலத்தில் வாழ்ந்த பாரதியாரும் 'பாரதமாதா திருப்பள்ளிஎழுச்சி என்ற தலைப்பில் ஐந்து பாடல்களே இயற்றி உறங்கிக் கொண்டிருந்த தமிழ் மக்களிடம் தேசபக்திக் கனலை எழுப்பினர் என்பதை நாம் அறிவோம். இவர்களுள் தொண்டரடிப் பொடி யாழ்வாரும் மணிவாசகப் பெருமானும் பதிகமுறையில் பத்துப் பாடல்களே அருளினர். பாரதியார் ஐந்து பாடல் களையே அமைத்தார். ஸுப்ரபாதம் ஆக்கியவர்.இருபத்து மூன்று பாடல்களே இயற்றினர். பாரதியார் தமிழ் மரபி னின்றும் விலகினர். ஸுப்ரபாதம் ஆசிரியர் ஒரு கவிமர பினையும் பின்பற்ருது பக்திமரபினையே பற்ருசாகக் கொண்டு பாடல்களே அமைத்துக் கொண்டார். மேற்குறிப்பிட்ட நான்கு வடமொழி நூல்களே முறையே தழுவி அமைக்கப் பெற்றவை, திருவேங்கட மாலை யில் அடங்கியுள்ள திருவேங்கடவன் திருப்பள்ளி எழுச்சி, திருவேங்கடவன் துதி, திருவேங்கடவன் திருவடித் துதி, திருவேங்கடவன் மங்கள வாழ்த்து என்ற நான்கு நூல்களும். வடமொழியிலுள்ள நான்கு நூல்களையும் தமிழ்க் கவிதைகளாக வடித்தெடுத்தவர் என் அரிய நண்பர் திரு. இரா. பத்மநாபன் அவர்கள். இவர் தந் சமயம் காரைக்குடி அழகப்பா பொறியியற் கல்லூரி அலுவலகத்தில் முதல்வரின் தனியலுவலராகப் பணி யாற்றுபவர். திருவேங்கடவன்பால் எல்லையற்ற பக்தியும் தமிழின்பால் மிக்சஈடுபாடும் கொண்டவர் என்பதை இருபதாண்டுக்குமேல் இவருடன் கொண்ட நெருங்கிய தொடர்பால் நான் நன்கு அறிவேன். அடக்கமான