பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22


22 பேசப்பெற்றிலும் அதனைக் கூறுபவர் இளங்கோவடிகளே யாவர் என்பதை நாம் மறத்தலாகாது. திருவரங்கத் தைக் குறைவான அடிகளிலும் திருவேங்கடத்தைச் சற்று அதிகமான அடிகளிலும் கூறியவர் இளங்கோவடி களே யன்றி மாங்காட்டு மறையோன் அல்லன். எனவே, ஒன்றன் குறைவையும் மற்றதன் நிறைவையும் காரண மாகக் கொண்டு நிறைவாகவுள்ளதை இடைச் செருக லாகக் கொள்ளல் எவ்வாற்ருனும் பொருந்துவதன்று. பெருமதிப்பிற்குரியவரும் விருப்பு வெறுப்பின்றி ஆராய் பவருமான பிள்ளையவர்கள் ஏன் இத்தகைய முடிவுக்கு வந்தார் என்பதை என்னல் புரிந்துகொள்ள முடியவில்லை. பொதுவாக இக்கால ஆராய்ச்சியாளர்கள் சமாதானம் சொல்ல முடியாததற்கெல்லாம் எளிய வழியாகக் கைக் கொள்ளும் முறைகளில் இடைச் செருகல் என்று தள்ளி விடுவது ஒன்றுகும். இத்தகைய ஒரு முறையைப் பிள்ளை யவர்கள் மேற்கொண்டார் என்று கூறவும் என் மனம் ஒருப்படவில்லை. பேராசிரியர் டாக்டர் S. கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள் மேற்குறிப்பிட்ட திருவேங்கடத்தின் வருணனை யைச் சங்க காலத்து வேங்கடத்தைக் குறிப்பதாகக் கொண்டுள்ளார்கள். அவர், “தாழாஅது உருமெனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங்கால் வளிமான் நோன்ஞாண் வன்சிலைக் கொளீஇ அருகிறத் தழுத்திய அம்பினர் பலருடன் அண்ணல் யானை வெண்கோடு கொண்டு நறவுகொடை கெல்லின் நாண்மகிழ் அயருங் கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான் மழபுலம் வணக்கிய மாவண் புல்லி