பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30


3ö அவற்றுள் ஒரு பகுதி சேஷாசல மலைகள் என வழங்கப் பெறுகின்றன. ஆயினும், மேற்குறிப்பிட்ட மூன்று தொடர்களில் முக்கியமான தொடர் தென்திசையில் மேலும் கடற்கரையை நோக்கிச் சென்று சென்னைக்கு வடக்கில் சில மைல்கள் தொலைவிலுள்ள பொன்னேரி வரையிலும் பரவியுள்ளது. மேலும் ஒழுங்கற்ற நிலை யிலும் தாழ்வான உயரத்திலும் உள்ள இன்னொரு தொடர் கர்னடகப் பீடபூமியின் அடிப்பகுதியினின்றும் தொடங்கி, வடதிசையாகச் சென்று அனந் தபுரம் கர்நூல் மாவட்டங்களில் சிதறிய நிலையில் அமைந்து கிடக்கின்றது. இவற்றுள் நடுப்பகுதியில் அமைந்துள்ள மலைக்கூட்டங்கள் கர்நூல் மாவட்டத்தில் நல்ல மலைகள் (நல கொண்ட) என வழங்குகின்றன. அவை அங்கிருந்து 'தென் திசையை நோக்கிச் சென்று ஒர் ஒற்றைத் தொடர் வடிவத்தில் திருப்பதி, காளத்தி இவற்றின் அருகிலுள்ள மலேக் கூட்டங்களைச் சந்திப்பதுபோல் அமைந்துள்ளன. ஆகவே, இந்த மலைகள் சென்னைக்கு அரை டிகிரி வடக் கில் ஒர் எல்லைப்புறம் போல் அமைந்துள்ளன. இவை கர்நாடகப் பீடபூமியிலிருந்து பொன்னேரி அருகிலுள்ள கடற்கரை வரையிலும் கீழ்த்திசையை நோக்கி நீண்டு பரவி தமிழகத்தின் எடுப்பான வடபுற எல்லேபோல் அமைந்து கிடக்கின்றன.' மிகப் பழங்காலத்தில் இன்று விசாகப்பட்டினத்தரு கில் இருப்பதுபோல் கடல் கிழக்குப் பக்கத்தில் மலேகட்கு மிக அருகில் இருந்தது. இன்று கிழக்குப் பக்கத்தில் கட லுக்கும் மலேகட்கும் இடையிலுள்ள குறுகலான கடற் கரைப் பகுதி தொல்காப்பிய காலத்திற்கு 2500 அல்லது 3000 ஆண்டுகட்குப் பிறகு புதிதாக உண்டாகியிருத்தல் 41, A_History of Tirupathi - už 1-2.