பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31


31 வேண்டும். அல்லது இன்றுள்ள கடற்கரைக்குக் கிழக்கிலிருந்த மலைகளைக் கடல் விழுங்கியிருத்தல் வேண்டும். கிழக்குக் கடற்கரையிலும் மேற்குக் கடற் கரையிலுமுள்ள கற்பாறைகளைக் கடல் அடித்துச் சென் றது என்பது சிறுகாக்கைப் பாடினியாரின் பாடற்பகுதி யால் உறுதியாகின்றது. கடலுக்கும் மலைக்கும் நேரிட்ட போரினைக் கற்பனை நயந்தோன்றக் கூறும் பாடற்பகுதி இது: 'வடதிசை மருங்கின் வடுகுவரம் பாகத் தென்திசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும் வரைமருள் புணரியொடு பொருது கிடந்த நாட்டியல் வழக்க நான்மையின் கடைக்கண் யாப்பின திலக்கணம் அழைகுவன் முறையே.' இதில் வடதிசைக்கண் ஆந்திரநாடு வரம்பாகக் கூறப் பெற்றிருப்பதைக் காண்க. வடக்கில் கிருஷ்ணை நதிக்கும் துங்கபத்திரை நதிக் கும் வடபெண்ணே நதிக்கும் சற்றுத் தெற்கிலும் குன்று களும் மலைத் தொடர்களும் சூழ்ந்த நிலப்பகுதி தென் னிந்தியாவில் மிக வெப்பமான பகுதியாகத் திகழ்வதை இன்றும் காணலாம். சுற்றுப் புறத்திலுள்ள கற்பாறை களிலிருந்து அதிகரிக்கப்பெற்றுப் பரவும் கோடைகாலக் கதிரவனின் வெப்பம் 120-லிருந்து 125° F வரையிலும் எட்டுகின்றது. இப் பகுதிகளில் கதிரவனின் வெப்பத் தாக்குதலால் மரிப்பவர்களைப்பற்றியும் நாம் கேள்வியுரு மல் இல்லை. கோடைக் காலத்தில் மக்கள் பெரும்பாலும் பகல்நேரத்தில் வீட்டைவிட்டுக் கிளம்புவதில்லை. நம் உடம்பிலுள்ள ஈரம் வெப்பமான காற்றில்ை உறிஞ்சப் பெறுவதால் நண்பகலில் வறட்சி மேலிட்டு உடலில் جیاماس بعد، دما، به ۴ م -۸ ه. . 42. சிறுகாக்கைப் பாடினியார்