பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32


32 ஒருவித எரிச்சல் தோன்றுவதைஉணர்கின்ருேம். ஆகவே, வறண்ட தன்மையுடைய இப்பகுதி சங்க நூல்களில் குறிப்பிடப்பெறும் வேங்கடம் என்ற நாட்டுப்பகு தியைப் பெரும்பாலும் ஒத்திருப்பதை அறியலாம். அண்மைக் காலத்தில் ஏற்பட்ட இருப்புப்பாதைகளின் காரணமாக இப்பகுதியிலுள்ள ஒரு சில நகரங்களைத் தவிர, ஏனைய பகுதிகள் யாவும் இன்றும் பிற்போக்குத் தன்மை யுடையனவாகவே இருப்பதைக் காண்கின்ருேம். அண் மைக் காலம் வரையில் இப்பகுதி கிட்டத்தட்ட ஆண்டு தோறும் வற்கடத்தாலும் கொள்ளை நோய்களாலும் தொற்று நோய்களாலும் பீடிக்கப்பெற்று இருந்தது. ஏதோ மழைக்காலத்தில் இப்பகுதியிலுள்ள ஆறுகளிலும் ஒடைகளிலும் வெள்ளம் பெருகி வழிந்தாலும், அது சமவெளிப் பகுதியைவிட மிகவும் தாழ்ந்திருப்பதால் அவை பாசனத்திற்குப் பெரும்பாலும் பயன்படுவதில்லை. ஆயினும், தற்காலத்தில் சிறுசிறு அணைகளே அமைத்து நீர்த்தேக்கத்தை உண்டாக்கும் திட்டங்களால் இப்பகுதி யைச் சார்ந்த பெரும்பாலான இடங்கள் கணிசமான அளவுக்கு மாற்றங்கள் அடைந்து வருகின்றன. வேங்கடத்தை ஆண்ட அரசர்கள் : இனி, இப்பகுதியை ஆண்ட அரசர்களைப்பற்றி ஒரு சிறிது அறிந்து கொள்வோம். எட்டுத்தொகை நூல்க ளாகிய அகநானுாற்றிலும் புறநானூற்றிலும் புல்லி’ என்ற ஒர் அரசன் குறிப்பிடப்பெறுகின்ருன். புறநானூறு 'ஆதனுங்கன் என்ற இன்னெரு அரசனையும் குறிப்பிடு கின்றது. இவர்களைப்பற்றிச் சங்க நூல்களில் அறியக் கிடக்கும் செய்திகளைக் கோவைப்படுத்திக் கூற முயல்வேன். புல்லி முதலில் இவனைப்பற்றி அறிந்த செய்திகளைக் கூறுவேன். இவன் தமிழகத்தின் வடஎல்லையாக விளங்கும்