பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38


33 'பொய்யா நல்லிசை மாவண் புல்லி' என்றும், "நெடுமொழிப் புல்லி' என்றும் மாமூலனர் சுருங்கிய வாய்பாட்டால் பாடிப் போற்றுவதைக் காண்க. திரையன். இவன் தமிழகத்துப் பேரரசர் மூவரோடும் ஒருங்கு வைத்து மதிக்கத்தக்க மாண்புடையவன். பெரும்பாணுற்றுப்படையின் தலைவன். கடியலூர் உருத் திரங்கண்ணனரால் பாராட்டப் பெற்றவன். இவனைப் பற்றி அகநானூற்றில் வரும், "வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை' "செல்லா நல்லிசைப் பொலம்பூண் திரையன் பல்பூங் கானல் பவத்திரி” என்ற குறிப்புகளால் இவன் வேங்கட நாடாண்ட விழுச்சிறப்புடையான் என்பதும், பூஞ்சோலை பல சூழ்ந்த பவத்திரி என்னும் ஊர் உடையான் என்பதும் இவனைப் பற்றி அறியத் தக்க செய்திகளாகும். பவத் திரி என்னும் ஊர் கிழக்குக் கடற்கரையில் தற்காலக் கூடுருக்கு அருகிலுள்ளது. பெரும்பாணுற்றுப் படையால் இவனைப்பற்றி அறியக் கிடக்கும் செய்திகள் இவை "திருமாலே முதல்வகைக் 50. அகம்.359. 51. அகம்-393. 52. அகம்-85. 53. அகம்-440,