பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42


42 அது "கடல் கொண்ட பவத்திரி கோட்டம்" என்ற கல் வெட்டுச் சொற்ருெடரால் அ றியக்கிடக்கின்றது என் தும் நாம் அறிகின்ருேம். இந்தக் கடல் கோள்களுக்குப் பிறகு திரையன் தன் தலைநகரைக் காஞ்சிக்கு மாற்றிக் கொண்டான் என்பது தெளிவாகின்றது. காஞ்சி மாநகர் இளந்திரையனின் தலைநகராக இருந்தது என் பதனையும், அது வடநாட்டிலுள்ள நலாந்தா தட்சசீலம் போன்று பல்கலைக் கழகங்களைக் கொண்டிருந்தது என் பதனையும் நாம் அறிவோம். புல்லி என்பான் வேங்கடத்தின் மேற்குப் பகுதியை ஆண்டிருத்தல் கூடும். இப்பகுதி பாண்டியர் அரசாண்ட பகுதிக்கு மேற்பகுதியாக அமைந்திருந்தது என்பது அடி யிற்கண்ட சங்கப் பாடல்களின் பகு திகளால் அறியக் கிடக்கின்றது. "செந்நுதல் யானை வேங்கடம்" "ஓங்கல் யான உயங்கிமதம் தேம்பிப் பன்மா ஒருசிறைப் பிடியொடு வதியும் புடையலங் கழற்கால் புல்லிக் குன்றத்து" "ஞால்வாய்க் களிறு பாந்தட் பட்டெனத் துஞ்சாத் துயரத் தஞ்சுபிடிப் பூசல் நெடுவரை விடரகத் தியம்பும் * கடுமான் புல்லிகாடிறந் தோரே' மேற்குத் தொடர்ச்சிமலை இயல்பாக யானைகள் வாழும் இடமாகும். அவை பெரும்பாலும் அண்மையிலுள்ள மலைப் பகுதிகளில் அலைந்து திரிந்திருத்தல் கூடுமேயன்றி 62. அகம்.265 63. அகம்-292 64. நற். 15,