பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51


51 சுரன் என்பவன், நாட்டில் பேரழிவினை ஏற்படுத்திய மாபெரும் அசுரன் ஆவான். அரசரின் அரண்மனைக் கருகிலுள்ள சாமுண்டி மலையிலுள்ள சாமுண்டீஸ்வரி என்ற தேவதை அந்த அசுரனைக் கொன்று நாட்டைத் தீங்குகளினின்றும் மீட்டுவித்ததாகக் கதை. அந்த நகர் மகிஷாசுரன் ஆட்சியின் கீழிருந்ததால் மகிஷாசுரனுார் என்று வழங்கி வந்தது. இது வெள்ளைக்காரர்களால் மைசூர் என வழங்கப்பெற்று அப்பெயரே அம் மாநிலத் தின் பெயராகவும் நிலைத்துவிட்டது. அண்மையில் அம் மாநில அரசு, அதனை, அதன் பழம்பெரும் பெயராகிய கர்நாடகம் என வழங்கச் சட்டமும் இயற்றியதை நாம் நன்கு அறிவோம். எனவே, மகிஷம் என்பது பழைய பெயராகிய எருமை’ என்பதன் மொழிபெயர்ப்பாகும் என்பதை நாம் அறிதல் வேண்டும். இடைக்காலத்தில் அப் பெயருக்குப் புராண வழக்கும் ஏற்பட்டு சமயச் சார்பும் நேர்ந்தது. சங்க காலத்தில் அந்நாட்டிற்கு எருமை நன்னடு’ என வழங்கியதை அகநானூற்ருல் அறிகின்ருேம்.' "நாரரி கறவின் எருமையூரன்" 'எருமை வெளியஞர்' 'எருமை குடகாடு' என்ற சங்ககால வழக்காறுகளே நோக்குக; இவை சங்க காலத்தில் மைசூருக்கு வழங்கப்பெற்ற பெயர்களாகும். இவற்றுள் ‘எருமை குடநாடு என்ற தொடர் கவனத் திற்கு உரியது. தொல்காப்பியம் என்ற தொல்விலக் 78. அகம்-340. 79. அகம்-36, 80. அகம்-12, 73, புறம் 273,303. 81. அகம்-115,