பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56


56 (கடியும் ஒழிக்கும்; திண்ணம்.உறுதி செறிந்த, நிறைந்த புகல்-இருப்பிடம்; பொன் உலகு-பரமபதம் ; புணர்க்கும்-அடைவிக்கும்.) - - பாடலைப் பன்முறை படித்துப் படித்து அநுபவிக்கவேண் டியது. அது எம்பெருமான் பிரசாதமாகிய இலட்டு போல் இனிப்பதை நாம் உணர்ந்து மகிழலாம். இனி, வேங்கடம்' என்ற சொல்வின் பொருள் மாற்றத்தைக் காண்போம். வேங்கடம்-பொருள் மாற்றம் : முதற் பொழிவில் வேங்கடம் என்ற சொல்லின் பொருளை விளக்கினேன். அதனை ஈண்டு நினைவுகூர வேண்டுகிறேன். இடைக்காலத்தில் பக்தி இயக்கம் பெரும் செல்வாக்குப்பெற்ற காலத்தில் வேங்கடம்’ என்ற சொல்லும் புதுப்பொருளைப் பெற்றது என்று கருதலாம். ஈண்டு திருவாய் மொழியிலுள்ள ஒரு பாடலே ஆய்வது பொருத்தமென்று கருதுகின்றேன். "வேங்க டங்கள்மெய் மேல்வினை முற்றவும் தாங்கள் தங்கட்கு நல்லன வேசெய்வார் வேங்கடத்துறை வார்க்கு நமஎன்னல் ஆங்கடமை.அ துசுமந்தார்கட்கே.' (வேம்-வெந்துபோம்; கடங்கள்-பாவங்கள்; மேல் வினை-இனி விளையக் கூடிய பாவங்கள்; முற்றவும்-சகல பாவங்களும்; நல்லன. கைங்கரியங்கள்; நம நம : (வடசொல்); சுமந்தார்க்கு-வகிக்கிறவர்கட்கு.) ஆழ்வார்கள் காலம் வரை 'வேம்-வெந்துபோம், கடங்கள் - பாவங்கள் என்று வழங்கின. தன்னை 2. திருவாய். 3. 3: 6. - سیسی سیسی سی بی بیبیسیسیپیسیسی بیبیسیپیسیسی سیببببببببببیسی