பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69


Śğ காற்கடைக் கொண்டிருக்கக் கண்டு ஆனந்தாஸ்ருக்கள் பனிப்பக் கொந்தளித்துக் குளுலைக் கூத்தாடிக்கொண்டு சைவர்களே ஒட்டினர்’ என்பது. இதல்ை உடையவரால் புதியனவாகச் சங்கசக்கரங்கள் நிறுவப்பட்டனவல்ல வென்பதும், அவை நிறுவப்பெற நேர்ந்த வரலாறும் தெளிவாகும். மேற்கூறிய வரலாறேயன்றி, இன்னெரு வரலாறும் வழங்கி வருகின்றது. பெரும்பக்தனை தொண்டைமான் சக்கரவர்த்திக்குச் சங்குசக்கரங்கள் பெருமானல் அளிக் கப்பெற்ற ஐதிகம் ஒன்று உண்டு. தொண்டைமான் சக்கரவர்த்தி திருவேங்கடமுடையான்மீது பக்திமேலிட்டு அப்பெருமானை எப்பொழுதும் சேவித்துக் கொண்டு திருமலையிலேயே குடிகொண்டிருத்தலையறிந்த பகை மன்னர்கள் அவனது நாட்டைக் கைக்கொண்டனர். தொண்டைமான் அதனைத் திருவேங்கடமுடையான் சந்நிதியில் விண்ணப்பஞ் செய்து வணங்கி நின்ருன் எம்பெருமான் தனது திருவாழி திருச்சங்குகளே அவ னுக்கு ஈந்து, இவற்றைக்கொண்டு நீ மாற்ருரைத் தவருது வென்றிடுக’ என்று கூறியருளினர். அங்ங்ணமே தொண்டைமானும் பகையை வென்று இழந்த அரசையும் பெற்றனன் என்பது வரலாறு." இதல்ை சில காலம் எம்பெருமான் திருமேனியில் அவ்வாயுதங்கள் இல்லாதிருந்தனவென்றும், அதனல் நேர்ந்த சைவவைணவ வாதத்தை உடையவர் நீக்கியருளினர் என்றும் ஒரு சாரார் கூறுவதும் உண்டு. இதனைக் கருத்திற் கொண்டு திவ்விய கவியும் தலைவியின் பிரிவாற்ருமை கண்ட செவிலி இரங்கும் துறை யில், 16. திருவேங்கடத் தலபுராணம் - 18. தொண்டைமான் சக்கரவர்த்திக்குத் திருவாழி திருச்சங்கு ஈந்த அத்தியாயம் தாண்க, .