பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72


#2 என்று கூறும் வாதம் பொருத்தமற்றது. அதே ஆசிரியர், அதே காதையில், பாண்டி நாட்டு அழகர் மலையையும் திருமாலிருஞ்சோலையையும் கூறியிருக்கின்ருர் அன்ருே ? அம் மாதிரியே திருவேங்கடத்தையும் அவர் மாலவன் குன்றமாகக் கருதுவது பொருத்தந்தானே. தொல்காப் பியர் ஒவ்வொரு கடவுளர்க்கும் நிலம் வகுத்திருப்பது உண்மையேயாயினும், மலைப்பகுதியில் திருமால் கோயில் கொள்வது உண்டென்ருல் அது பிழையென்றும், அதனல் அத் திருமாலை மலைக்குரிய முருகளுக்கி விடுதலே தமிழ் நூல் முறையென்றும் துணிவதுதான் மிகவும் விநோத மான போக்காகும். எனவே, இப்போக்கினை ஏற்றுக் கொள்வோமாயின், ஆழ்வார் பெருமக்களால் மங்களா சாசனம் செய்யப்பெற்ற திருமாலிருஞ்சோலை, திருக் குறுங்குடி, திருநீர்மலே, திருமெய்யம், சிங்கவேள் குன்றம் (அகோபிலம்), திருக்கடிகை (சோழ சி ங் க பு ர ம்)" பதரியாசிரமம் முதலாக மலைப்பகுதியில் கோயில் கொண்ட திருமால்களே என்ன செய்வது? அவர்களைக் காலி செய்து முருகனுக்கு இடந்தருமாறு ஆணை பிறப் பிக்க முடியுமா? அன்றியும், மருதம், நெய்தல் நிலப்பகுதி களில் கோயில் கொண்ட திருமால், சிவபிரான், முருகன் முதலிய தெய்வங்களையும் அகற்றிவிட்டு அவ்வந் நிலங் களுக்கு உரியவராகத் தொல்காப்பியத்தில் வரையறுக் கப்பெற்ற இந்திரனையும் வருணனையும் முை றயே குடியேற்றவேண்டியதும் இன்றியமையாமையாகிவிடும். இந் நிலைகளை எண்ணிப் பார்க்க வேண்டுகின்றேன். முருகக் கடவுள் குறிஞ்சிக்குரிய கடவுளாதலால், திருவேங்கடமலைக்கும் அவர் பொதுவில் அதிதெய்வம் என்பதில் மறுப்பில்லை. ஆனல், அவருக்குரிய மலையில் 19. இப்போது 'சோளிங்கர் என வழங்குவது, அரக் கோணம் காட்டுப்பாடி இரயில் வழியில் உள்ளது.