பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75


73 குறிக்கும்போது நெடியோன்' என்பது அக்கடவுட்குத் தமிழில் அநாதியாய் வழங்கும், மால் மாயோன் என்பவை போன்று திருநாமமாய், நிலங்கடத்தற்கு நீண்ட திரிவிக்கிரமன் என்ற பொருள் குறிக்கும் பெயராகும். "நெடியோன் குறளுரு வாகி" "நெடியோன் மார்பில் ஆரம் போல" 'நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி' "நெடியோ னன்ன நெடுங்கை' "நெடியவன் மூவகைப் படிவம்' என்று அடைகளும் முன் தொடர்ச்சிகளும் இல்லாமல் தனித்து நின்றே திருமாலைக் குறிக்கும் ஆற்றலுடைய தா தலைக் காணலாம். ஆகவே, இளங்கோவடிகள் தனி நிலையில் கூறிய "நெடியோன் குன்றமும்’ என்ற தொடரில், நெடியோன்' என்ற பெயர் திருமாலையன்றி வேறெவரையும் குறிக்கவில்லை என்று உறுதியாக அறுதி பிட்டுக் கூறலாம். திருவேங்கட முடையான நெடியோன் என்ற பெயரால் இளங்கோவடிகள் கூறியது அப்பெருமானைத் திரிவிக்கிரமனுகக் குறிக்கும் ஆழ்வார்பெருமக்கள் வழக்கு கட்கு மி க வு ம் ஒத்துள்ளதையும் காணலாம். "நெடியோனே வேங்கடவா' என்ருர் குலசேகரப் பெருமாள். சடகோடரும் 'தாள்பரப்பி மண்தாவிய ஈசனை' என்று சிறப்பித்தார். உச்சிமேற் புலவர் கொள் 29. 33. பெருங். 2. 15: 10. 30. சிலப்.25 வரி 84 34. பெரு. திரு. 4: 9. 31. 35. திருவாய்3. 3:11. 32. பெருங். 5, 4:9,