பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8


g என்ற பாசுரப்பகுதி நினைவிற்கு வந்தது. தமிழ் இலக்கியக் கடலிலும் திருவேங்கடத்தைப்பற்றிய குறிப்புகள் அங்க னமே இருப்பதாக எண்ணினேன். எள்ளினுள் எண்ணெய் போல் இருக்கும், பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசுங் கொண்டலின் இருப்பிடமும் ஆங்கனம் தானே இருக்க முடியும்? கடிதம் பெற்ற நாள் தொட்டு சிலவாரங்கள் இப் பொருள்பற்றியே என் சிந்தனை ஒடிய நிலையிலிருந்தது. இறுதியில் சங்ககால வேங்கடம்', 'இடைக்கால இலக்கியத்தில் வேங்கடம்', 'திருவேங்கட்த்தின்மீது எழுந்துள்ள நூல்கள்’ என்ற மூன்று தலைப்புகளில் என் பொழிவுகளைத் திட்டமிட்டேன். இங்குள்ள வசதிகளுக்கேற்பவும், என் ஒய்வுக் கேற்பவும், என் அறிவிற்கேற்பவும் இப் பொழிவுகள் அமைந்தன. இதற்குமேலும் திருவேங்கடத்தைப்பற்றிய செய்திகளைத் திரட்ட இப்பொழிவுகள் ஒரு தூண்டுகோலாக அமைதல் கூடும் என்ற நிலையில் அமைதி பெறுகின்றேன் . பேராசிரியர் டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள் ஆராய்ச்சி உலகிற்கும் பொதுமக்கள் உலகிற்கும் இடையே ஒரு பாலம்போல்-சேதுபோல்-அமைந்து திகழ்ந்ததைத் தமிழ்கூறு நல்லுலகம் நன்கு அறியும். பிள்ளை அவர்கள் அறிஞர்கள் ஆராய்ச்சியால் கண்டறிந்த கருத்துக்களே யெல்லாம் பொதுமேடையில் எளியமுறையில் வாரிவழங்கிப் பொது மக்களிடையே ஆராய்ச்சி மனப்பான்மைக்கு வித்திட்டு அதனை வளர்த்தவர். தம் சொல்வன்மையால் பொதுமக்களிடம் அழகிய குழைவுத் தமிழில் இலக்கியச் சுவையை நன்கு ஊட்டியதால் இன்று அவர்கள் உள்ளத்தில் சொல்லின் செல்வராக நிலையான இடம்பெற்றுத் திகழ் கின்றர்கள். அத்தகைய பெரியார் அவர்களின் நினைவுச் சொற்பொழிவுகளை ஆற்றும் பேறு பெற்றமைக்குப் பெரிதும் மகிழ்கின்றேன். - 3. மீட்ைசி அம்மை பிள்ளைத்தமிழ்-செய் !