பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79


79 "செங்கண் நெடியோன் கின்ற வண்ணமும் எங்கண் காட்டென்று என்னுளங் கவற்ற 53. வந்தேன் குடமலை மாங்காட் டுள்ளேன் ணிேலம் கடந்த நெடுமுடி யண்ணல் தாடொழு தகையேன் போதுவல்’ என்ற அடிகளால் அறியலாம். இவ் வருணனை முருகனுடையதாயின், திருமால் திவ்விய தேச யாத்திரையின் பொருட்டுத் தான் புறப்பட்டுத் திருமா லிருஞ்சோலையைச் சேவித்துக் கொண்டு வருவதாக அந்த மறையோன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள் வதோடு, கோயில், திருமலை என்ற பண்டைய வழக்கிற் கேற்பச் திருவரங்கச் சிறப்பை முன்பும் திருவேங்கடச் சிறப்பைப் பின்பும் வைத்து அவன் அவ்விடத்துக் கூறிய இயைபோடும் மிகவும் முரனுதல் காணலாம். இதலுைம், திருவேங்கடம் திருமால் மலே என்பதே இளங்கோவடி களின் கருத்தென்பது மலே இலக்காக அமைகின்றது. வேறு சான்றுகள் : அன்பர்களே, திருவேங்கடம் திருமாற்கே சிறப்பாக உரிய தலம் என்பதற்கு ஆழ்வார்களின் கூற்றுக்களே யன்றி வேறு சான்டிகளும் உள்ளன. அவற்றையும் நிரல்படக் கூறுவேன். (1) வெறிகொள்...அருளியும் ஆழியவன்’ (பு. வெ. மா-230) என்ற ஐயரிதளுரின் தெளிவான வாக்கு முன்னரே காட்டப்பட்டது. (2) பாரதம் பாடிய பெருந்தேவனரும் தம் காலத் துப் புகழுடன் திகழ்ந்த திருவரங்கம், திருமலை,