பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83


83 சிறப்புடைய தலமாகக் கருதப்பட்டதன்று என்பது தெளிவாகின்றது. இன்றைய இரண்டாவது பொழிவில் இனி இடைக் கால இலக்கியத்தில் திருவேங்கடம் பற்றி வரும் செய்தி களை ஆராய்வோம். இடைக்கால இலக்கியங்களிலும், 1. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2. கம்பராமாயணம் 3. வில்லிபுத்துாரார் பாரதம் ஆகியவற்றில் வரும் செய்திகளே ஆராயப் பெறும். முதலாவதாக நாலாயிரத்தை நோக்குவோம். 1. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்: இது தென்னட்டில் வைணவப் பெருமக்களால் பெரிதும் போற்றப்பெறும் சிறந்த பக்திப் பனுவலாகும். இது மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார் பெரு மக்கள் பன்னிருவரால் அருளிச் செய்யப் பெற்ற பாசுரங்களைக் கொண்டது. இதில் ஆழ்வார்கள் பதினொருவர் இறைவன்மீது அருளியுள்ள இருபத் திரண்டு பிரபந்தங்களும், மற்றறியேன் குருகர் நம்பி, பாவின் இன்னிசைப் பாடித் திரிவனே' என்று நம்மாழ் வாரைப் போற்றிப் புகழும் மதுரகவிகள் நம்மாழ்வார் மீது அருளியுள்ள ஒருபிரபந்தமும், திருவரங்கத்தமுதனர் உடையவர்மீது அருளியுள்ள ஒரு பிரபந்தமுமாக இருபத்து நான்கு பிரபந்தங்கள் அடங்கியுள்ளன. இந்நூலில் இசைப்பாத் தொகுதிகள் மூன்றும், இயற்பாத் தொகுதி ஒன்றுமாக நான்கு பிரிவுகள் உள்ளன. பக்திப் பாடல்கள் என்ற வகையில் இதனைப் போன்ற பெருமையுடைய நூல்கள் இலக்கிய உலகில் மிகச் 52. கண்ணினுண்-2,