பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87


37 கின்றது ஆண்யானை ஒன்று. அது தன் பெண் யானே யைக் காண்கின்றது. அதனை மீறி அப்பால் செல்ல மாட்டாது அதற்கு இனிய உணவு ஈந்து அதன் மனம் நிறைவிக்க விரும்புகின்றது. அம் மலையிலிருந்து மூங்கில் குருத்தொன்றைப் பிடுங்குகின்றது. அருகில் மலே முழைஞ்சிலிருந்த ஒரு தேனடையில் தோய்த்து அப் பிடியின் வாயில் ஊட்டுகின்றது குளோப் ஜாமுனே' ஊட்டுவதுபோல். இதனை ஆழ்வார், 'பெருகு மதவேழம் மாப்பிடிக்கு முன்கின்று இருகண் இளமூங்கில் வாங்கி-அருகிருந்த தேன்கலந்து நீட்டும் திருவேங் கடங்கண்டீர் வான்கலந்த வண்ணன் வரை." (வேழம்-யானை; பிடி - பெண்யானை; இருகண் . இரண்டு கணுக்களையுடைய, வண்ணன்-நிறத்தன்; வரை-மலை.) - என்ற சொற்படமாக்கிக் காட்டுகின்ருர். இத்தகைய ஒரு காட்சியைத் திருமங்கையாழ்வார் இமயமலையில் காட்டுவர். திருப்பிரிதி என்ற திவ்விய தேசத்தை வருணிக்கும் இந்த ஆழ்வார் இக்காட்சியைக் காட்டு கின்ருர், "வரைசெய் மாக்களிறு இளவெதிர்வளர்முளை அளேமிகு தேன்தோய்த்துப் பிரச வாரிதன் இளம்பிடிக் கருள்செயும் பிரிதிசென் றடைநெஞ்சே." - (வரைசெய் - மலைபோன்ற; களிறு-ஆண் யானை; வெதிர்-மூங்கில்; வளர்முளை - வளரும் இள மூங்கில்; 57. இரண்-திருவந்-75. 58, பெரிய-திரு.1-2:5,