பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதம் வேத மதமாக இன்றி சாதி மதமாக மாறியவுடன் பெளத்தமும் சமணமும் வேரூன்றின.* சாதி மட்டுமன்றி மனிதருள் உயர்வு தாழ்வு என்ற வேற்றுமைகள் புகுந்து இந்து மதத்தின் சாரம் புறக்கணிக்கப்பட்டது. அதுமட்டுமா? ஜீவகாருண்யத்தை உயிர் நாடியாகக் கொண்ட இந்து மதத்தில், உயிர் பலி வேள்விகளில் புகுத்தப்பட்டன. இந்து மதத்தின் உள்ளத்தைப் புறக்கணித்து தொழில் முறையில் விளைந்த பாகுபாடுகளைப் பயன்படுத்தி, பெண்ணடிமை, தீண்டாமை போன்ற நச்சு சக்திகள் புகுந்தன: விளையாடின. ஐக்களை ஆட்டி வைத்தன; மதத்தின் ஆணி வேரை அசைத்தன; தகர்த்தன.

இச்சமயத்திலே இரு மதங்கள் இந்தியாவில் செல் வாக்குப் பெற்றன. ஒன்று இரிடப தேவரின் ஜைனம்; மற் றொன்று கெளத்தம புத்தரின் பெளத்தம். ஜைனம் கொல் லாமை, அகிம்சை ஆகியவற்றை வலியுறுத்தியது. பெளத்தம் அன்பு மார்க்கத்தை போதித்தது.

நாளடைவில் இம்மதங்களின் உண்மை அறம் மறந்து மறத்தில் வீழ்ந்து புறத் தோற்றங்களில் அதிக கவனஞ் செலுத்தின. உருவ வழிபாட்டை எதிர்த்த இம்மதங்களில் உருவ வழிபாடு புகுந்தது. ஆடம்பரமான சடங்குகள் புகுந்தன. விழாக்கள் எடுத்து, விழைய வேண்டிவற்றை விரட்டின. மேலும் பிரசாரத்திற்குத் தேவையான புரா ணங்களைத் தோற்றுவித்தன. இப்படிப் பிறந்ததே ஜாதகக் கதைகள், ஜைனமும் பெளத்தமும் துறவறத்தை வலி யுறுத்தின.

ஜாதகக் கதைகள் கண்டவுடன் இந்து மத பேரறிஞர் என்ன செய்தனர்? தாமும் புராணங்கள் எழுதத் தலைப் பட்டனர். அப்படிப் பிறந்த புராணங்களில் சில தென்னகத் திலும் இறக்குமதி ஆயின. ஆனால் அதற்கு முன்னரே தமிழ்

  • இந்தியாவும் விடுதலையும்’, ‘இடைக்கால இந்தியா”,

L. 89-91 & 92,

88