பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாயன்மார் கூட்டத்திற்கு அறுபத்தி மூவர் என்று கூறுவர். ஆனால் அறுபத்தி மூவரே அடியவர்கள் என்று கொள்ளலாகாது. அறுபத்தி மூவர் அல்லாத ஏனைய பக்தரும் அடியவரே.

இது எப்படிப் புலனாகிறது? சேக்கிழாரின் வாழ்த்துப் பாடலைப் பார்ப்போம்.

‘உலகெலாம் உணர்க்தோதற்கரியவன்

கிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்தாடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்.”* இப்பாடலில் உலகெலாம் என்பது தாய்மையைக் குறிக்கும். மங்கலத்தை குறிக்கும் சொல்லே உலகு. உலகம் எது? அதில் வாழும் அனைத்து உயிர்களுமே உலகு. ஆராய்ந்து, ஆராய்ந்து அறிவதற்கரிய ஒன்று கடவுள். எல்லா உயிர்களும் கடவுளே. கடவுள் எல்லா சமயத் தாருக்கும் பொதுவுடைமை. கடவுளே இயற்கை. எல்லா உயிர்களும் நுகர்ந்து இன்புற ஏற்பட்டதே இயற்கை. ஒளியாகிய உயிர்களிடத்திலே விளங்குவதும் ஆண்டவனின் ஒளியே. அத்தகைய ஒளியை மலர் தூவி, சிலம்படி வாழ்த்தி வணங்குவோம் என்றார் சேக்கிழார்.

இங்கு அம்பலத்தாடுவான்-உலகின் உயிரிகளை ஆட்டு விப்பவன்; உயிர்களின் ஒவ்வோர் அசைவிலும் ஆடுபவன்; அனைத்தையும் ஆட்டுவிப்பதால் தானே எப்போதும் எங்கும் ஆடுபவன் என்ற பொருள் கொள்ளலாம்.

சேக்கிழார் பாடிய அதே பெரிய புராணம் திரு.வி.கவை யும் கவர்ந்தது. திரு.வி.க அதே பெரிய புராணத்தில் கருத்து செலுத்தியதேன்?

இதே கருத்துக்கள் கீழே குறிப்பிட்டவைகளிலும் காணலாம். ‘அகர முதலெழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு-திருக்குறள். ‘உலகம் யாவும் தாமுள ஆக்கலும்'-கம்பன்.

90