பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதற்கு உய்வு எது?'சமரச சன்மார்க்கமே உய்யும் வழி. சமரச சன்மார்க்கம் என்றால் என்ன? உலகில் உள்ள பல மார்க்கங்களும் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ளன. அதாவது பிறப்பின் குறிக்கோளை அடைதல். பிறப்பின் குறிக்கோள் யாது? தத்தம் ஆற்றலுக்கு ஏற்றபடி ஆண்ட வனைத் துதித்து, அறிந்து, பின் உறுதி நிலை அடைதலே. இதற்கு முதன் முதல் அறியவேண்டிய உண்மை-எப்பெயரில் அழைத்தாலும், எப்படி விளித்தாலும், மெய்ப்பொருள் ஒருவனே. அவனுக்கு முதலும் இல்லை. முடிவும் இல்லை. மொழி, நாடு, சமயம் முதலிய வேற்றுமைகளும் இல்லவே இல்லை. அத்தகைய இறைவன் எல்லா உயிர் களிலும் நீக்கமற இருப்பவன். பன்மையில் ஒருமைத் தன்மையுடையது. அவன் வேற்றுமையில் ஒற்றுமையையும் காண்பவன். இதை அறிந்து செயல்படுவதே மாந்தர் உய்ய சிறந்த வழி. குறுகிய மனப் போக்கைப் போக்கினால்...

இப்பரந்த நோக்கு வருமாயின், சாதி, மதம், மொழி, உயர்ந்தோர், தாழ்ந்தோர் போன்ற குறுகிய மனப்போக்கு கள் தானே மறையும். எல்லா உயிர்கள் மாட்டும் அன்பு பெருகும். பயன் கருதாப் பணி எங்கும் பரவும். கற்றவைக்கு ஏற்றபடி இயற்கையுடன் கூடிய இல்லற வாழ்வு அமையும். பெரிய புராணத்தில் திரு.வி.க வற்புறுத்தியவை எவை?

இயற்கை வழி இல்வாழ்வு சமரச சன்மார்க்கத்தின் அடிப்படை. தவறு செய்தால் உய்வு உண்டா? நிச்சயம் உண்டு. எப்போது? தவறு செய்தபின் அதை உணர்ந்து இறைவனிடம் உண்மையாகவே முறையிட்டால், பாவ மன்னிப்பு நிச்சயம் உண்டு. சமரச சன்மார்க்கத்தில் பாவமன்னிப்பு ஒரு சிறப்பான அங்கம். முறையீட்டிற்கு ஓடி வருவான் ஆண்டவன்.

திரு.வி.க பெரியபுராணத்தில் கருத்து செலுத்தியதன் காரணங்களில் முக்கியமானவை மூன்று. சமரச சன்மார்க்கக் கொள்கைகளைப் பரப்புவது முக்கிய நோக்கமாகும். அடுத்த

92