பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படியாக பெண்ணினத்தை இழிவுப்படுத்தி, இவ்வினத்திற்கு ஏற்பட்டிருந்த தாழ்நிலையைப் போக்க வேண்டும் என்ற கருத்தையும் பெரிய புராணம் கொண்டுள்ளது என்றால் மிகையன்று. அத்துடனா? அருளுடைய பொதுவுடைமை யைப் பிரசாரம் செய்வதும் மற்றொரு முக்கிய நோக்க மாகும்.

ஈண்டு பெரிய புராணத்துடன் நாயன்மார் திறம் என்ற சிறு நூலையும் சேர்த்து ஆராய்வோம்.

நாயன்மார் யார்?

நாயன்மார் என்பவர் ஆண்டவன் அடிக்கு அன்பு செலுத்தி தலைமைப் பேறெய்தியவர் என்று பொருள். இவர்கள் பற்பல மரபுகளில் பல்வேறு சாதிகளில் தோன்றிய வர்; பற்பல இடங்களில் தோன்றியவர்; வெவ்வேறு மரபில் தோன்றியவர்: தொண்டிலும் தொழிலிலும் வேற்று.0 உண்டு. கோலத்தாலும் மாறுபாடு அதிகம். ஆனால் கடவுளிடம் அன்பு செலுத்துவதில் ஒன்றுபட்டவர். இவர் கள் சாதிகளைப் பற்றி இன்றும் யாரும் கவலைப்படுவ தில்லை. அறுபத்தி மூவர் அனைவர்க்கும் ஒரேவித வழிபாடு, வழிபாடு செய்பவரும் உயர் குலத்தினர் ஆகக் கருதப்படு பவரே! உதாரணமாக, வேடர் கண்ணப்பருக்கும், திருஞான சம்பந்தருக்கும் ஒரே மாதிரியான வழிபாடுதான்! சலவை தொழிலாளர் திருக்குறிப்புத் தொண்டரை யாரேனும் அவர் சாதி பற்றி, குலம் பற்றித் தொழாமல் விடுவரோ? இல்லை!

அறுபத்தி மூவரில் வேதியவர் இருந்தனர். வேளாளர்,

சான்றோர், பரதவர், வேடர் என பற்பல சாதியர் இருந் தனர். ஆனால் பூசல் உண்டோ? இல்லை, இல்லை.

  • அறுபத்தி மூவர்-நாயன்மார்-குலம் தனி அட்ட

வணையில் காண்க.

93