பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“காரைக்கால் அம்மையார் திருமுறை”

பெண்களைப் பற்றி மிகத் தாழ்மையான கருத்துக்கள் நிலவிய அக்காலத்தில், அவைகளை திரு.வி.க. அவர்கள் எழுதிய காரைக்கால் அம்மையார் திருமுறை அறிஞர் களுக்கு ஒரு பெரிய கலங்கரை விளக்கமாகவும், அறியாமை யால் பெண்ணை மாயை என்று வெறுத்த கும்பலுக்கு சாட்டையடியாகவும் அமைந்தது. இது மிகையன்று, உண்மை, அப்பட்டமான உண்மை.

திரு.வி.க சமுதாயத்தில் புகுந்த இந்த உயர்வு தாழ்வு மனப்பான்மையைப் போக்கும் வழியை சுந்தரர் மூலம் வலியுறுத்தினாரோ என்று தோன்றுகிறது.

‘தண்கையிலை யது நீங்கி காவலூர் வாழி

சைவனார் சடையனார் தயை னாராய் மண் புகழ அருட்டுறையான் ஒலைகாட்டி மணக்க விலக்க வன்தொண்டாய் அதிகை சேர்ந்து’

சமூகக் கட்டுப்பாடுகள் நிறைந்த அக்காலத்தே, சுந்தர மூர்த்தி நாயனார்-உயர்குல பிராமண குலத்தைச் சேர்ந்த வராயினும், பரவை என்னும் உருத்திர கணிகையையும், சங்கிலி என்னும் வேளாளப் பெண்ணையும் மணந்தார். இம்மணவினைக்கு ஏற்பாடு செய்து, தூதும் சென்றவர் யார்? தில்லை நடராஜனே.

‘கண்பினுடன் அருள் புரிய ஆரூர் மேவி

கலங்கிளரும் பரவை தோள் நயந்து வைகித் திண்குலவும் விறன் மிண்டர் திறங்கண் டேத்துத் திருத் தொண்டத் தொகையருளாற் செப்பினானே’

அது தான் போகட்டும். தம் குலத்திலே பெரியோர் நிச்சயித்த பெண்ணைத் திருமணம் செய்யாவண்ணம் தடுத்தாட் கொண்ட தியாகேச பெருமானின் இச்செயலுக்

94