பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மற்றவர்க்கு இது தெரியாது.

அடியவன் புகழைப் பரப்ப சிவனடியார் கோலத்தில் வந்தார் சிவபெருமான். திருவோடு ஒன்றைக் கொடுத்தார். தாம் வரும் போது திருப்பித் தர வேண்டும் என்றார். “சரி” என்றார் நாயனார்.

சில காலம் கழிந்தது. வந்தார் அடியார். திருவோடு கேட்டார். நீலகண்டன், வைத்த இடத்தில் தேடினார். எல்லாப் பக்கமும் பரந்து பரந்து பார்த்தார். ஒடு மறைந்தே போயிருந்தது. மாற்று ஓடு தருவதாக சிவனடியாரிடம் கெஞ்சினார்; மன்றாடினார்; மனமுருக வேண்டினார். அடியார் மனமிரங்கினாரா? இல்லை, இல்லை.

குளத்தில் மனைவி கைப்பிடித்து ஒடு மறைந்து விட்டதாக சத்தியம் செய்யும்படி கட்டளையிட்டார்:

நீலகண்டர் தயங்கினார்.

சிவன் அவர் இல்லற வாழ்வில் அவர் கடைப்பிடித்த கடினமான புலனடக்கத்தை வெளிப்படுத்த தீர்மானித் திருக்கிறாரே! விடுவரோ? அவர் தாம் இல்லற வாழ்க்கையில் மறைந்திருந்த புலனடக்கத்தை உலகுக்கு உணர்த்தினாரா ஏன்?

தன்னடக்கத்தி ற் கா. க வு ம் புலனடக்கத்திற்காகவும் ஒருவன் மனைவி மக்களை விட்டு காட்டுக்கு ஓடவேண்டியது இல்லை. இல்லறத்திலேயே மனைவியுடன் வாழ்ந்துக் கொண்டு, புலனடக்கம் கடைப்பிடிக்கலாம் என்பதைக் காட்டவே போலும்!

குயவன் ஒருவனுக்கு புலனடக்கம் இருந்தது, திடமனம் இருந்தது அஃதாயின் சாதியை அடிப்படையாகக் கொண்டதல்ல புலனடக்கம். தனிப்பட்ட மனிதன் ஒருவரின் மன உறுதியைப் பொறுத்தது என்பதை சுட்டிக் காட்டுவது

98