பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீலகண்டர் வரலாறு என்பதைத் தெளிவுறக் காட்டு கிறார் திரு. வி. க.

கண்ணே ஈந்த பெருமகனார்:

இது போன்றதே கண்ணப்பரின் உறுதியும்.

‘கண்ணுக்குக் கண் கொடுத்து தொண்டு செய்யக் கூடியவர் உலகில் எத்தனை பேருளர்?

கண்ணப்பன் யார்? வேடுவன். வேட்டையாடி மிருகங் களை உண்டவன். முதன் முதலின் சிவனை அறியாதவன். ஆனால் இலிங்கத்தைக் கண்டவுடன், சட்டென மனம் மாறினான் தீராக் காதல் கொண்டான் இறைவனிடம், அதனால் இலிங்கத்தைக் கண்டவுடன் உடும்புப் பிடியாக’ பிடிக்கக் கூடியவன் கண்ணப்பன் தவிர வேறு யார்?

உயர்குல அப்பர் சுவாமிகள் வேடுவன் கண்ணப்பனைத் தொழுதார்” என்றால் சிறுமையாகி விடுமோ? ஆகாது. ஆகாது!:சிவனடியாரிடை வேற்றுமை உண்டு என்று சொல்ல இடமிருக்குமோ? இருக்காது, இருக்காது, இருக்கவே இருக்காது!!

இடைச்சாதி இழுக்காமோ?

திருமூலர் யார்?

“ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்’ என்ற பேருண்மையை ஒரே ஒரு வாக்கியத்தில் சொன்னவர். இந்த மெய்ஞானியின் வாக்கை நாம் உண்மை உணர்ந்து ஏற்கிறோம்; போற்றுகிறோம்; அதன் வழி நடக்க முயல்கிறோம். ஏன்?

  • திருநாவுக்கரசு சுவாமிகள், பக். 149, நாயன்மார்

வரலாறு.

99