பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 வாழ்வாங்கு வாழ்ந்து காட்டியவர்

‘திரு. வி. கவைப் பற்றி இன்னும் நன்றாக அறிய வேண்டுமானால், அவர்தம் வாழ்க்கைக் குறிப்பைப் படியுங்கள்’ என்று எங்கள் ஆசிரியர்கள் கூறியது இன்னும் எங்கள் காதுகளில் ஒலிக்கின்றது. அந்த நாளிலே, வாழ்க்கைக் குறிப்பில் என்ன பிரமாதமாக இருந்து விடப் போகிறது. எல்லா வாழ்க்கைக் குறிப்புக்கள் போலத்தான் இதுவும் இருக்கும் என்று அலட்சியமாக எங்கள் இளம் உள்ளம் நினைத்ததும் உண்டு. ஆனால் பிற்காலத்தில் அவர்தம் வாழ்க்கைக் குறிப்பை படித்தபோது, அஃது ஒரு பெரிய சவாலாகவே இருந்ததைக் கண்டோம்; அறிந்தோம்; வியந்தோம்.

இதன் பின்னணி

நாட் குறிப்பு அவர் எழுதவில்லை. தம் நினை வேட்டிலிருந்து பல ஆண்டுகளுக்குப் பின் புரட்டி, மிகவும் செவ்விய முறையில் தம் வாழ்க்கைக் குறிப்பை எழுதியுள்ளார் திரு.வி.க என்றால் அது மிகையே அன்று.

‘இது என்ன பிரமாதம்! ஆங்கிலக் கவிஞன் வில்லியம் வொட்ஸ்வெர்த் தன் வாழ்க்கை வரலாற்றில்-தன் இளம் பிராயம் பற்றி, தம்முடைய பிரிலூட் (Prelude) என்ற கவிக்கோர்வையாக ஐம்பது ஆண்டுகள் கடந்த பின்

I 06