பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைத்தான். சிவபிரான் எந்தக் கோவில் கும்பா பிடேகத்தை ஏற்றார்? மனக்கோயில் கட்டிய வறியன் பூசலார்க் கோயில் கும்பாபிடேகத்தையே ஏற்றார்.

வரலாறு அவ்வாறாயின், அவர் தம் அடியார் அறுபத்தி மூவரின் முன்னுரையைக் காலத்திற்கேற்ப விஞ்ஞான ரீதியில்-அணுகுண்டு விண்வெளிப் பயணம் போன்றமாறிக் கொண்டே வரும் சூழ்நிலைக்கு மாறாக அருமருந் தாக அமையுமாறு உலகிற்கே ஒர் அரிய விரிவுரையைத் தந்த திரு.வி. கவை எத்துணைச் சிறப்புடன் போற்றி ஏற்றியிருப்பார்!

அவர் பிள்ளைமைக்கால விளையாட்டுக்களைப் பற்றி மேலும் அறிய வேண்டின், அவர் வாழ்க்கைக் குறிப்பு முதல் பகுதியை ஊன்றிப் படிக்க வேண்டும். அப் பகுதி சொல்லும் அரிய விவரங்கள் எத்தனை, எத்தனை!

திரு.வி.கவின் இந்தப் பிள்ளைமையை நன்வழியில் அவர்தம் பெற்றோரும், நல்லாசிரியன்மாரும் நன்கு பண்படுத்தி, பயன்படுத்தியிராவிடின், அறிவுக் கடலாகத் திரு.வி.க இருந்திருப்பாரா? பண்பு மிக்க மனிதராக இன்றும் போற்றப் படுவாரா? சற்றே சிந்தியுங்கள்!

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்

திரு. வி. கவின் பள்ளிப்படிப்பு முற்றுப் பெறவேயில்லை: என்றாலும் அது அவர்தம் அறிவாற்றல் வளரத் தடையாக இருந்ததோ என்றால், இல்லவே இல்லை; ஏன்?

பள்ளிப் படிப்பில்லா விட்டாலும் திரு. வி. கவின் அறிவு வேட்கை சிறந்த ஆசிரியர்களைத் தேடிச் சென்றது. நாடிச் சென்றது. கிட்டியபோது மனம் ஒரே கூறாக செவியுணவை ஏற்றது; இருத்திக் கொண்டது; ஆராய்ந்தது, உண்மை எது என்றும் தெளிந்தது.

1 II