பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் அறிவை அவருக்குப் பெருக்கியவர் கதிரைவேற் பிள்ளையே,

‘'நரசிம்மனைப் பாடிய நாவால்

நாயகனைப் பாட மாட்டேன்! “

என்றார் ஒர் இசைப் பேரறிஞர்.

கதிரைவேற் பிள்ளை ஒரு கடல்; தமிழ்க் கடல்; அவரிடம் பாடம் கேட்டப் பின், வேறு எவரிடமும் பாடம் கற்க திரு.வி.க வுக்கு மனம் இல்லை; என்றாலும் முறையாகத் தமிழ் பயில வேண்டும் என்ற தீரா அவாவோ தணியவில்லை; தணிக்கவும் இயலவில்லை. இந்தக் காதலை பின்னும் அதிகரிக்கச் செய்தவர் மயிலை பாலசுந்தர முதலியார் ஆவார்.

கல்வி வெறி அடங்காது; அடங்கவே அடங்காது. தமிழில் நல்லாசிரியனைத் தேடித் தேடி அலைந்தது. கற்றுக் கொடுப்பார் ஒருவரும் இல்லையே என்று ஏங்கித் தவித்தது.

அப்போது மயிலை வித்வான் தணிகாசல முதலியார் வந்தார். அவர் ஒர் அறிவுக் குன்று; அனுபவக் குன்று. சமயம் சினம் மிக்க எரிமலை. அவரை அணுகி தம் விருப்பம் தெரிவித்தார் திரு.வி.க. உடனே நன்னூலில் சில கேள்வி களைக் கேட்டார் தணிகாசல முதலியார். திரு. வி. க. வின் தமிழ் அறிவைச் சோதித்தார். ‘திருவருட் பயன் தொடங்கி னார்.

இது கண்டு வியந்தவர் பலர். ‘கிழவர் எப்படிப் பையனுக்கு எளியரானார்?’ என்று சிலர் அதிசயித்தனர்; பலர் பொறாமையுங் கொண்டனர். கலகமும் செய்தனர்; ஏன்? திரு.வி. கவின் பாடங்கேட்டலை நிறுத்துவதற்காக, வித்துவான் அசைந்தாரா இல்லை.

ஒன்றை மட்டும் கற்று, கிணற்றுத் தவளையாக இருக்க தமிழ்த் தென்றல் மனம் இடந்தரவில்லை. திருக்குறள்

112