பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதாரம் ஏதும் இல்லாமல் செய்து விடாதீர்கள்!’ என்றேன் கண்டிப்பாக.

கொஞ்சம் காலம் சென்றது. வாழ்க்கைக் குறிப்பு’ எழுத ஆரம்பித்தார் தமிழ்க்கடல், நான் ஆறுதலடைந்தேன். திரு.வி.க மணிவிழாவின்போது அவர் தம் வாழ்க்கை வரலாற்றை எழுதி, வெளியிட எண்ணினேன். திரு.வி.க அது வேண்டாம் என்றார் திட்டவட்டமாக. அவர் மறுப்பை உதாசீனம் செய்ய எனக்குத் துணிச்சல் இல்லை. திரு.வி.க அமரராகி, ஆண்டுகள் பல ஒடிவிட்டன. அவர் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதே அவருக்கு நான் செய்யும் பெரிய தொண்டு என்று எண்ணி, அதனைச் செய்ய துணிந்தேன். அவர் வாழ்க்கை வரலாறும் நல்ல தொரு முறையில் வெளிவந்தது.

பின்னர் என் ஆசிரியர் பெருந்தகைக்குச் செய்” வேண்டிய மற்றுமொரு பணி எனக்கு நினைவு வந்த , அவர்தம் நூல்களின் உயர்வை அனைவரும் உணர வேண்டு மென்பதே அது. அதன் விளைவே இந்நூல்.

எனவே தினமும் என் மனைவி திருமதி. வி. ஜலஜா சக்திதாசனுடன் அந்த நூல் சம்பந்தமாக, சர்ச்சைகள் வரும். அபிப்பிராயங்களை பரிமாறிக் கொள்வோம். தேவை யான நூல்களின் பெயர்களை எழுதிக் கொடுப்பேன் மாலை வேலையிலிருந்து வரும்போது அந்த நூல்களில் கிடைத்த வற்றைச் சுமந்துக் கொண்டு வருவாள். பெரும்பாலும் இருவருமே நூல் நிலையங்களுக்கு ஒன்றாகச் செல்வோம். குறிப்பெழுதுவோம். திரும்பிய பின் இருவரும் அக் குறிப்புக்கள் பற்றி அலசி அலசி பேசுவோம்.

‘'நீ இந்தப் பகுதியை எழுது! நான் இந்தப் பகுதியை எழுதுகிறேன்!” என்று சொல்வேன்.

அவளும் மறுக்காமல் அந்தப் பகுதிகளை எழுதுவாள். இப்படியே தான் அந்த பெரும் பணி-எங்கள் தெய்வத்தின் இலக்கிய விமர்சனத்தை-செய்ய ஆரம்பித்தோம்; இனிதே அது நடந்து வந்தது. ஆனால் இடையிலே நான் நோய்வாய்ப் பட்டேன்.

xi