பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சக்திதாஸ் சுப்ரமணியன், அவரிடம் பத்திரிகை ஆசிரியப் பயிற்சி பெற்ற உதவி ஆசிரியன்; அவரே அப் பத்திரிகையின் ஆசிரியனாகவிருந்து ஆற்றிய தொண்டினை புகழக்கூடிய ஒருவர் இருப்பாரேல், திரு. வி. கவைத் தவிர, அது வேறு யார்?’ ஓர் இளைஞனைப் புகழும் திரு. வி. கவின் உள்ளம் எத்துணை பெரியது!!!

ரா. கிருஷ்ணமூர்த்தி, பிற்காலத்தில் ‘கல்கி ஆசிரியராக இருந்து பேரும் புகழும் பெற்றவர். அவரும் திரு. வி. க விடம் பயிற்சி பெற்றவரே. அத்தகைய பெரும்புள்ளிகளைப் பற்றி மட்டும் எழுதி மற்றவரை மறந்திருக்கலாமே! ஆனால் திரு. வி. கவின் உயர்ந்த உள்ளம் அதற்கு இடம் தந்ததா? இல்லையே!

மணிவிழா வேண்டாம்!

1942-திரு. வி. கவுக்கு மணிவிழா கொண்டாட நினைத்த அந்த இளைஞனை (சக்திதாஸ் சுப்ரமணியனை) திரு. வி. க எவ்வாறு அன்புக் கட்டளையிட்டு தடை விதித்தார் பார்ப்போமா?

“ஒராண்டுக்கு முன்னரே (1942) சக்திதாஸ் சுப்பிர மணியத்தின் விரைவு ‘நவசக்தி'யில் எனது மணிவிழா வருகையைக் குறித்து மணியோசை எழுப்பியது. அச்சமயம் ‘நவசக்தி'யில் சூத்தானந்த பாரதியார் வாழ்த்து வெளி வந்தது. யான்’ ‘நவசக்தி நிலையம் போந்து என்னை அறியாமல் மணிவிழாவைக் குறிப்பிட்டதைப் பற்றி வருந்து கிறேன்; இனி அதை வலியுறுத்தாது விடுக’ என்று வற்புறுத்தினேன். சுப்ரமணியம் என் வற்புறுத்தலுக்குச் செவி சாய்த்தனர்.”*

ஆனால் மற்றவர் வாளாயிருப்பரோ? மணிவிழாவைக் கொண்டாட வேண்டும் என்று நாரண துரைக்கண்ணனார்

  • முன்குறிபிட்ட நூல், பக். 296. ** திரு. வி. க வாழ்க்கைக் குறிப்பு-II, பக். 96.8.

J 1 &