பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நட்பு வேறு, கருத்து வேற்றுமை வேறு!

பெரியாரின் துணைவியார் நாகம்மை காலமடைந்தார். அவ்வம்மையார் படத்தைத் திறந்து வைத்தவர் யார் தெரியுமா?

‘குடியரசு சொல்லடி பெற்ற வீரர்; பெரியார் தாக்குதல் பலவற்றிற்கு ஈடுகொடுத்த அஞ்சா நெஞ்சர் திரு.வி.க.

ஈரோட்டில் இந்த படத்திறப்பு நடந்தது.

சீர்திருத்தச் செம்மல்

‘பென்மை ஓங்குக! பெண்மையே கடவுள்!’ என்று பேச்சளவில், சீர்திருத்தம் முழங்கியவர் சிலர்; முழங்குகிறவர் பலர். பேச்சளவில், எழுத்தளவில் நிற்கும் சீர்திருத்தவாதிகள் எத்தனையோ பேர். நடைமுறையில் ஏற்பவர் எத்தனை பேர்?

கலப்பு மணத்தை ஆதரித்து வீராவேசமாகச் சொற்

பொழிவாற்றுபவர் எத்தனை, எத்தனை பேர்! தம் வீட்டின்

அருகே நடக்கும் கலப்புத் திருமணங்களில் கலந்து கொண்ட பிரமுகர் எத்தனை பேர்!

திரு.வி.க பெண்ணின் பெருமை நூலை எழுதிய போது அவரைப் போற்றியவர் இலையென்றே சொல்லலாம்; துாற்றியவரோ பலர்.”

பெண்ணுலகின் மாசுகளை சட்டம் மட்டும் களையுமா? ஒருக்காலும் களைய இயலாது. சமூகமும் சட்டத்துடன் இணைந்து, முற்பட்டு உழைத்தால் தான் தீமைகளை அகற்ற முடியும். சமூகத்தின் துணையில்லா சட்டம் வெறுஞ் சட்டமே. சீர்திருத்தத்திற்கு வழிகோலாது என்கிறார் திரு.வி.க.

  • வாழ்க்கைக் குறிப்பு-II, பக், 668.

J 24