பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செயல் வீரர்

ஆறே ஆண்டுகள் இல்வாழ்க்கை நடத்தி மனைவியை இழந்த திரு.வி.க மறுமணத்திற்கு இசைந்தாரா? இல்லை. ஏன்?

“என் மனைவி எங்கே மறைந்தாள்? மறைந்தது அவளது பருவுடல். அவளது நுண்மை அன்பாகி என்னில் ஒன்றி, என்னைத் தொண்டனாக்கி யான் ஆற்றும் பணிக்குத் துணை புரிகிறது’ என்கிற்ார் திரு.வி.க.

எதிர்ப்பிடை ஆதரவு

திரு.வி.க கலப்பு ஆதரித்தார். அருண்டேல் ருக்மிணி தேவி திருமணம் உறுதி செய்யப் .

அவ்வளவே! கிளர்ச்சி, கிளர்ச்சி, எங்கும் கிளர்ச்சி! ‘இந்து பத்திரிகை சீறியது: சுதேசமித்திரன் வீசியது.

இத்துணை எதிர்ப்புகளையும் கண்டு அஞ்சாது ஆதரவு அளித்தவர் ஒருவரே. அவரே திரு.வி.க. ஆதரவு தந்த பத்திரிகையோ தேச பக்தன்.”

இத்திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சீறிய சிலர் நேரடியாக திரு.வி.க.வின் பத்திரிகைக் கூடத்திற்குச் சென்றனர்; அவரைத் திட்டித் தீர்த்தனர்; கடற்கரையில் கூட்டங்கள் கூட்டினர். அன்னிபெஸண்ட் அம்மையாரையும் திரு.வி. கவையும் வசை பாடினர்.

திரு.வி.க அஞ்சி, ஒளிந்தாரா? இல்லை, இல்லை! அருண்டேல் ருக்மிணி திருமணத்திற்குப் பின் சென்னை சங்கத்திற்கு அழைத்தார். வாழ்த்தும் கூறினார்.

  • வாழ்க்கைக் குறிப்பு, பக். 752.

125