பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசை வல்லுநர் தாமரைக்கண்ணி அம்மையார்; பார்வதி அம்மையார் ஆகியோர் பற்றி அவர்தம் வாழ்க்கைக் குறிப்புக்கள் மூலம் அறிகிறோம்.

டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரைப் பற்றி எவ்வளவு சிறப்பாக எழுதியிருக்கிறார்!

“டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் சென்னைச் சட்டசபையில் ஒரு மசோதா கொண்டு வந்தார். அது வழுக்கி வீழ்ந்தவரின் முன்னேற்றத்தைக் குறிக்கொண்டது. அச்சகோதரிமார் கோயிலில் பொட்டு கட்டுதலை நிறுத்தி மணவாழ்க்கையராதற்கு வழிகோலத் துணைபுரிவது. அம்மசோதாவுக்கு எதிர்ப்புக்கள் பிறந்தன. எங்கெங் கிருந்து பிறந்தன? குருட்டு நம்பிக்கையுடையவரிடத்திருந்து மட்டும் பிறக்கவில்லை; தேசீய பத்திரிகைகளிடம் இருந்து பிறந்தன; தேசீயவாதிகளிடமிருந்து பிறந்தன; சீர்திருத்தி க் காரென்று தம்மை பறைச் சாற்றியவரிடத்திருந்தும் பிறந்தன.”* -

தமிழ்க்கடல் என்ன செய்தார்? நவசக்தி வாயிலாக முத்துலட்சுமி அம்மையார் மசோதாவுக்கு வரவேற்புக் கூறினார். கூட்டங்களிலும். அந்த மசோதாவை ஆதரித்துப் பேசினார்.

சாரதா மசோதாவுக்கும் எழுந்த எதிர்ப்புக்கள்

கொஞ்சமா நஞ்சமா? இந்த பெரும் எதிர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆக்கம் தந்தவர் தமிழ் முன்வரே!

திரு. வி. கவும் ஏனையோரும்

திரு. வி.க. தன்னைப் பற்றி என்ன கூறுகிறார்? தணக்கும் ஏனையோருக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் யாவை?

‘யான் உலகன்; இந்தியன்; தமிழன்; தனி மனிதன். தனி மனிதன்-தமிழனாக-இந்தியானாக-உ ல க னா க

  • திரு. வி. க வாழ்க்கைக் குறிப்புக்கள், பக். 737.

1 37