பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரிந்து பெருகுகிறேன். யான் தமிழ்நாட்டில் பிறந்தவன்; தமிழ்நாட்டிலிருந்து பணி செய்கிறேன். அத்தொண்டுகளில் தமிழ் நாட்டுக்குத் தக்கவை தமிழ் நாட்டுக்கும், இந்தியாவுக்கு உரியவை இந்தியாவுக்கும், உலகுக்குப் பொருந்தியவை உலகுக்கும் பயன்படும். எனக்கு வகுப்பு வெறி, நிறவெறி முதலியன நஞ்செனத் தோன்றும். இவை களை ஒழிக்க வேண்டி யான் சன்மார்க்கத் தொண்டாற்று கிறேன். இக்கருத்துடைய என்னை வகுப்புவாதிகளும், அவர் போன்ற மற்றவர்களும் எள்ளுகிறார்கள் தாக்குகிறார்கள். என் உழைப்பெல்லாம் ஆரியர்க்குப் போகின்றன என ஒலமிடுவோரும் உளர். ஐயோ பாவம்! ஆரியர் யார்? தமிழர் யார்? ஹிந்து யார்? முஸ்லீம் யார்? இந்தியர் யார்? இங்கிலீஷார் யார்? கீழ் நாட்டவர் யார்? எல்லாரும் மனிதரே, எல்லாரையும் மனிதரென்று உணரச் செய்வதே சிறந்த சீர்திருத்தத் தொண்டு. மற்றையது அடவி காட்டுக் கூக்குரல். கூக்குரலிடுவோர் வசை மொழிகளை ஏற்றுக் கொள்வதும் எனது தொண்டின் கூறுகளில் ஒன்று.”* தொழிலாளர் தளபதி

இங்கிலாந்தின் தொழிற்கட்சித் தலைவர் கீழ் ஹார்டி என்பவர். அவர்தம் தொடர்பு ஏற்பட்டது திரு. வி. கவுக்கு. அவருடைய வரலாறு தமிழ் அண்ணலின் நெஞ்சைத் தொட்டது; தொழிலாளர் உலகைப் பற்றிச் சிந்திக்கச் செய்தது. தொழிலாளர் பற்றிய நூல்களையும் ஆராயத் துாண்டியது.

வெஸ்லி கல்லூரியில் அவர் தமிழாசிரியராக இருந்த போது ஒரு நாள் ஒருவர் அவரிடம் வந்தார். யார் அவர்?

செல்வபதி செட்டியார்.

திரு. வி. கவை வெங்கடேச குணாமிர்த சபையில் சொற்பொழிவற்ற அழைக்கவே வந்தார். அச்சபையில்

  • வாழ்க்கைக் குறிப்புக்கள், பக். 844.

I 28