பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'நான் வெளியூரில் இருப்பவன், அடிக்கடி சென்னைக்கு வருவேன்; போவேன்; சென்னையிலேயே வசிக்கும் ஒரு வரையே தலலவராகக் கொள்ளல் நன்று. அத்தகையவர் வாடியா. அவரையே தலைவராகக் கொள்ளுங்கள்’ என்றார் கேசவப் பிள்ளை.

வாடியா தியாசோபிகல் சங்கத்தைச் சேர்ந்தவர். அன்னி பெசன்ட் அம்மையாரின் வலக்கை என விளங்கியவர்.

அவரை அணுகினர் தம் விண்ணப்பத்துடன்.

அவரும் இணங்கினார்.

தொழிலாளர் சங்கம்-தோற்றம்

சென்னையிலே முதல் தொழிலாளர் சங்கம் 1918 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 தேதி தோற்றுவிக்கப் பட்டது. இச்சங்கத்திற்கு வாடியா தலைவர்; திவான்பகதூர் கேசவப் பிள்ளையும் திரு.வி.கவும் உதவித் தலைவர்களாகத் தேர்ந் தெடுக்கப் பட்டனர்.

இவ்வாறு காணப்பட்ட தொழிலாளர் சங்கங்கள் பெருகின; விரிந்தன, வேரூன்றின. இவ்வளவு குறுகிய காலத்தில் எப்படி வேரூன்றியது? இதற்குக் காரணம் திரு.வி கவின் நாவன்மையே! அயராத அவர்தம் உழைப்பை உரமாகக் கொண்டு ஆங்காங்கே சங்கங்கள் அமைக்கப் பட்டன.

இவ்வாறு தென்னாட்டில் எழுந்த தொழிலாளர் விழிப்புணர்ச்சி காட்டுத்தீபோல் நாடு எங்கும் பரவியது. பம்பாய், கான்பூர், கல்கத்தா, நாகபுரி முதலிய பல இடங்களிலும் தொழிலாளர் சங்கங்கள் தோன்றின. தொழிற் சங்கங்களில் ஈடுபட்டோர் பலர்; பற்பல அரசியற் கட்சியினர்.

I 3 0