பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலை நிறுத்தம்

1921 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலே பக்கிங்காம் கர்னாடிக் மில் தொழிலாளர் பதின்மூவாயிரம் பேர் வேலை நிறுத்தம் செய்தனர்.

வேலை நிறுத்தம் ஒரு நாளா? இரண்டு நாட்களா? ஆ ..நூ மாதங்கள்

பாதுகாப்பற்ற தொழிலாளர் ஈவிரக்கமின்றி சுட்டுத் தள்ளப்பட்டனர்.

அக்கிரமத்தை எதிர்த்து அஞ்சாது நின்றார் தளபதி, தொழிலாளர் பக்கம் சேர்ந்து.

அதிகார வர்க்கம் சும்மா இருக்குமா? வேலை நிறுத்தத்தை வகுப்புக் கலவரமாக மாற்றியது, கைக் கூலிகள் உதவியுட ன்.

அத்துடனன்றி, தொழிலாளர் தலைவர் திரு. வி. கவை அந்தமானுக்கு கடத்தும் முயற்சியில் ஈடுபட்டது. வதந்தியை யும் பரப்பியது.

அப்போது ஆட்சியிலிருந்தவர் ஜஸ்டிஸ் கட்சியினர். திரு. வி. கவுடன் கருத்து முரண்பாடு கொண்டவரே மந்திரிகளாக இருந்தனர். என்றாலும் தன்னலமற்ற சேவையே வென்றது!

லார்ட் வில்லிங்டன் சென்னை கவர்னராக அப்போது இருந்தார். அரசு பிரதிநிதி திரு.வி.கவை எச்சரிக்கை மட்டுமே செய்ய முடிந்தது. நாடு கடத்த இயலவில்லை! ஏன்?

‘‘1920 ஆம் ஆண்டு நிகழ்ந்த தொழிலாளர் பெருந் தொல்லையின் போது டாக்டர் நடேச முதலியார், தியாகராய செட்டியாரையும் பனகல் ராஜாவையும் தூங்க விடுவதில்லை. அல்லும் பகலும் என்னைப் பார்த்த

I 32