பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்ணமிருப்பர். ஐஸ்டிஸ் ஆட்சியிலே தொழிலாளர் தலைவர்கட்கு எவ்விதத் துன்பமும் விளைதலாகாது என்று பாடுபட்டவருள் டாக்டர் நடேச முதலியாரும் ஒருவர்.”

இவ்வாறு குறிப்பிடுகிறார் திரு.வி.க.

அது மட்டுமா?

ஸர். பி. தியாகராச செட்டியார் தலையிட்டதே

காரணம்.

‘திரு.வி.கவை நாடு கட்டத்தினால் ஜஸ்டிஸ் மந்திரிமார் பதவி விலகுவர் என்று திட்டவட்டமாகக் கூறிய செட்டி யாரை உதாசீனம் செய்துவிட முடியுமா?

முரண்பட்ட, மாறான கருத்துக் கொண்ட ஜஸ்டிஸ் கட்சியினரை இவ்வாறு சொல்லத் தூண்டியது எது?

திரு.வி.கவின் பயன் கருதாப் பணி! ஆன்ம பலம்!

சிறுமை கண்டு பொங்குவாய்!

1942 ஆம் ஆண்டு நடந்தது மற்றொரு வேலை நிறுத்தம். போலீஸ் புலிகள் துப்பாக்கி முனையால் அதை அடக்கப் பார்த்தது.

விளைவு: துப்பாக்கி ரவைகளைக் கக்கியது. ஏழு பேர் உயிரைக் குடித்தது தொழிற்சாலையினுள்ளே.

வெளியே உயிரிழந்தவர் இருவர்.

தொழிலாளர் நடுவே சென்று கொண்டிருந்தார் திரு.வி.க. துப்பாக்கியினின்றும் வீறிட்டுப் புறப்பட்ட ரவை ஒன்று திரு.வி.கவின் தலைக்கு மேலே உராய்ந்து பறந்து சென்றது.

  • திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புக்கள்

A 440–9 @