பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 , p சற்று பார்ப்போமா!

‘இந்நாட்டில் தொழிலாளர் இயக்கந் தோன்றி இருபத்தைந்து ஆண்டுகளாகின்றன. இருபத்தைந்து ஆண்டு அனுபவம் எனக்குண்டு. புரட்சி நிகழ்ந்ததோ? இல்லை என்றே சொல்வேன். ஒரோ வழி நிகழ்ந்ததென்று சொல்லுதல் கூடும். புரட்சி ஏன் உச்ச நிலையை அடைய வில்லை? சாதி மத வெறி, சம்பிரதாயக் கட்டு, மூட வழக்க வொழுக்கம், மூர்க்கப் பிடிவாதம், முதலாளி அமைப்புக் களில் மோகம், தலைமைப் போராட்டம், விட்டுக் கொடுத்தல் இன்மை முதலிய தளைகள் புரட்சியைத் தகைந்து நிற்கின்றன என்று எனது அனுபவம் சொல்கிறது. இத்தளைகளை உடைத்தெறியத் தோன்றிய இயக்கங்கள் பலப்பல. அவைகளுள் சிறந்தது தொழிலாளர் இயக்கம்.

“புரட்சி புறத்தே முற்றும் நிகழவில்லை; ஒரோ வழி நிகழ்ந்தது; ஆனால் என் அகத்தே நிரம்ப நிகழ்ந்தது. யானும் மனிதன். என்னிடத்தும் கரடுமுரடு மூர்க்கம் முதலிய விலங்கியல்புகள் உண்டு. அ வை க ைள எப்படிப் புரட்டித் தள்ளுவது? அப்புரட்சிக்கு நூலாராய்ச்சி மட்டும் போதாதென்பதை என் வாழ்க்கை நன்கு உணர்ந்தது. எனது அகத்தில் புரட்சியை ஓரளவில் புரிந்தது இல்வாழ்க்கை; மற்றோரளவில் ஆற்றியவை மற்ற மற்ற இயக்கங்கள்; பெரிதும் நிகழ்த்தியது தொழிலாளர் இயக்கம். இவ்வியக்கம் எனது அகத்தில் அறப் புரட்சியைப் பெரிதும் நிகழ்த்தியதென்று உலகுக்குத் தெரிவிக்கிறேன்.

“தொழிலாளர் பல திறத்தினர். அவரொடு நெருங்கிப் பழகப் பழக விலங்கியல்புகள் ஒதுங்குகின்றன. அவை ஒதுங்க ஒதுங்கப் பொறுமையும் அமைதியும் படிந்து கொண்டே போகும். பொறுமையும் அமைதியும் படியப் பெறாதார் இயக்கத்தை விடுத்து நீங்குவது நல்லது.தொழி லாளரின் உள்நிலையைத் தெரிந்து கொள்வதற்கு வேலை நிறுத்தம் ஒரு கருவி. வேலை நிறுத்தத்தால் வெற்றி

,