பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

வரலாற்று நூல் இந்தியாவும் விடுதலையும்

வரலாற்று நூல்கள் எத்தனையோ உண்டு. அதிலும் இந்தியாவைப் பற்றி ஆங்கிலேயர் வெளியிட்ட நூல்கள் பலப்பல. இந்திய வரலாற்று ஆசிரியர்களும் ஏராளம், ஏராளம்! என்றாலும் இவைகளினின்று மாறுபட்டு தனித்து நிற்கிறது திரு. வி. கவின் இந்தியாவும் விடுதலையும்’ என்ற வரலாற்று நூல். அந்நூலைப் படிப்பவர்களுக்கு இக்கூற்று மிகையல்ல என்று புரியும்; அவர் இந்நூல் வாயிலாகக் கூறும் உண்மைகள் எத்திறத்தன என்பதும் புலனாகும்.

1940

இந்த அரசியல் மேதை திரு. வி. க இந்த நூலை 1940 இல் எழுதினார். அக்காலம் எத்தகைத்து? இந்தியா ஒர் அடிமை நாடாக வாடி வதங்கி அல்லல்பட்ட தாலம்: ஆங்கிலேயர் ஆள்வோர்; சுரண்டல், சுரண்டல் என்று எல்லாப் பக்கங்களிலும் சுரண்டி சுரண்டி இந்தியாவின் சிவனையே அன்னியர் உறிந்து கொண்டிருந்த காலம்,

‘எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு!”

1.37