பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாவல் தீவு - பாரத கண்டம்

இந்தியா முதன் முதல் ந | வ ல் தீவு என்றே அழைக்கப் பட்டது. பின்னர் பாரதம் என்ற பெயரை, துஷ்யந்தன்-சகுந்தலை மகன் பரதன் ஆண்டதால் பெற்றது. பாரசீகர் இங்கு வந்தனர். சிந்து நதிக்கு அப்பால் வாழ்ந்த வரை ‘சிந்து என்று அழைத்தனர். சிந்து ஹிந்து’ என்று திரிந்தது. இந்த சிந்து அல்லது இந்து மக்கள் பின்பற்றிய சமயக் கொள்கைகள் இந்து மதம் எனப் பெயர் பெற்றது. ‘'இப்பொழுது “ஹிந்துக்கள்’ என்னும் பெயரும் இந்தியா என்னும் பெயரும் ஒரு பொருளைக் குறி கொண்டு நிற்க வில்லை. ஹிந்துக்கள் என்பது இந்தியாவில் வாழும் ஒரு சமயத்தவரை உணர்த்தி நிற்கிறது. இந்தியர் என்பது பொதுவாக நாட்டவரைக் குறித்து நிற்கிறது.*

கிரேக்கர் ஹிந்துக்களை, இந்தியா என்றே அழைத்தனர். இந்தியா ஒரு பழம் பெரும் நாடு. நம் நாட்டில், அப் பொழுது வழக்கிலிருந்தவை இரண்டு மொழிகள், இவ்விரு மொழிகள் நாடு முழுவதும் வழக்கத்திலிருந்தன. ஒன்று திராவிடம்; மற்றொன்று வடமொழி அல்லது சமஸ்கிருதம். இவைகளின் ஆதி மொழி பிராகிருதம்.

நாட்டில் இலக்கியம் நல்ல நிலையில் இருந்தது.இயற்கை வளம் கொழித்தது.

மக்கள் வாழ்க்கையும் இயற்கையோடு இயைந்ததாக இருந்தது. சீவகாருண்யமே எங்கும் கைப் பிடிக்கப்பட்டது.

ஆரியர் வந்த பின்பும், உயிர்ப்பலியைத் தவிர்த்தனர். அஹிம்சா பரமோ தர்மா!’ என்ற கொள்கை நாட்டில் பரவி யிருந்தது. மகாபாரதம், இராமாயணம் என்ற இரு அறப் போர்கள் நடந்தன, அறப்போர் என்று சொல்வது சரியா? சரியே! நாட்டில் தலையெடுத்த அக்கிரமத்தை ஒடுக்கி.

  • திரு. வி. க, இந்தியாவும் விடுதலையும், பக். 4.

I 39