பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனினும் சமரச சன்மார்க்கக் கொள்கைகளை மக்கள்

பின்பற்றினர்.

மொஹேஞ்சோதாரோ, ஹாரப்பா ஆகிய இவ்விரு பண்டைய நகரங்களும் நாகரீகத்திற்குச் சிறந்த அத்தாட்சி. உலகே இந்தப் பண்பாட்டைக் கண்டு அதிசயித்தது.

இடைக்கால நலிவு

சீரும் சிறப்பும் பெற்றிருந்த இந்தியா இடைக்காலத்தில் சில சமயங்களில் நலிவுற்றதேன்? இதன் காரணம் முன்னரே கூறப்பட்டது. இடைக்கால வரலாற்றில் கனிஷ்கர், சமுத்திர குப்தர், சந்திரகுப்த விக்கிரமாதித்யர் போன்றோர் காலங் களில் இந்தியா செல்வாக்கு பெற்றிருந்தது உண்மையே. இந்தியா ஒரு குடையின் கீழிருந்ததும் உண்மையே.

நாட்டிலே பெளத்தமும், ஜைன சமயமும், இந்து சமயமும் இருந்தன. ஆனால் சமயப் பகை இல்லை. கள்வர் பயமில்லை. பெளத்த மதக் கோட்பாடுகளைக் கற்க வந்த சீன யாத்திரிகர் இந்நாட்டில் இருந்த நன்னிலையைப் பற்றித் தம் குறிப்புகளில் கூறியுள்ளார்.

இவையெல்லாம் இடைக்காலத்தின் முற்பகுதியில் இருந்தன. பிற்பகுதியில் சீனா, ஜப்பான் போன்ற நாடு களைக் கவர்ந்த கலைச் சிறப்பு, காவியச் சிறப்பு, சமரச சிறப்பு, இலக்கிய சிறப்பு, எல்லாம் குறைந்தன; ஒரளவுக்கு மங்கின; மறையவும் தலைப் பட்டன, ஏன்?

பின்னாளில் கலகம் நுழைந்ததே. தர்மத்தை சாய்த்தது கலகம். கலகத்தை விளைவித்தவர் மன்னர்; அத்துடனா? தர்மமற்ற மதத்திற்கும் ஆக்கம் தந்தனர். விளைவு? மதப் பூசல்! எங்கும் மதப்பூசல்! இந்த கரையான் மக்கள் மனத்தை மெல்ல அரித்தது, மூர்க்கத்தை அதிகப்படுத்தியது.

‘எந்த மதத்தினை ஆராய்ந்தாலும் அதன் அடியில் அறமிருக்கும். அருளிருக்கும். இவையற்றது மதமாகாது.

142