பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாக வளர்ந்தது: இராஜபுத்திர ஜாட் சாத்னாமிகள் கலக மாக கிளம்பி எங்கும் கலகம், குழப்பம், போராட்டம்! என்ற கலக்க நிலை ஏற்பட்டது.

குழப்பமும் சூழ்ச்சியும்

வாணிபம் செய்ய வந்த அயல் நாட்டவர் இந்நிலையை

தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தயாரா யினர்,

அவுரங்கசீப் அழித்த இந்திய ஓவியத்தை, பின் வந்த பொம்மை அரசர்கள் மீண்டும் சாயமேற்றி, செப்பனிட முயன்றனர்; ஆனால் தோல்வியே கண்டனர்.

சுதேச இந்துப் பேரரசு நிறுவிய சிவாஜியும், அவுரங்க சிப்பும் ஒத்துழைத்திருந்தால், தற்கால இந்தியா எவ்வளவு உயர்வாக இருந்திருக்கும்.”

இயற்கை எப்போதும் போலவே நல்லதையே செய்தது. பஞ்சம் இல்லை! வெள்ளம் இல்லை! வறுமை இல்லை! பின் நாடு ஏன் தாழ்வுற்றது!

மத வெறி-தீயில் புண்பட்ட இடைக்கால இந்தியா வேதனையில் தவித்தது: கண்ணிர் விட்டது; அப்போது அந்தக் கண்ணிரின் பயிராய் வந்தது தற்கால இந்தியா.

தற்கால இந்தியா

தற்கால இந்தியாவில் இந்து இராஜ்யமும் அழிந்தது. முஸ்லீம் இராஜ்யமும் அழிந்தது. இந்து முஸ்லீம் பிளவின் விளைவே இது. அதன் வினை எங்கும் பிரிவினை; பிரிவினை என் செய்தது; மேல் நாட்டினரை இந்த ஒற்றுமையின்மை தமக்கு உகந்த முறையில் பயன்படுத்தத் துண்டியது: இந்திய மண்ணில் அன்னியர் வேரூன்ற, சிதறிக் கிடந்த

  • திரு. வி. க. இந்தியாவும் விடுதலையும், பக். 125.

I 46