பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறு சிறு இராச்சியங்களைப் பகடையாக வைத்தனர். நாடு பிடிக்கும் சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சூதாட்டத்தில் முக்கிய பங்கேற்றவர்கள் ஆங்கிலேயரும், பிரெஞ்சுக் காரருமே.

ஆர்க்காடு போர்கள், பிளாசிச் சண்டை மூலம், தென்னிந்தியாவிலும் வட இந்தியாவிலும் பிரிட்டிஷ் இந்தியக் கம்பெனி புதியதொரு சாம்ராச்சியத்தை ஏற் படுத்தியது அனைவரும் அறிந்ததே.

முதலிலேயே வெற்றிகண்டு, வேரூன்றியவர்கள், இனி வேகமாக செயல்பட மாட்டார்களோ? பகைமையைத் தூண்டும் சூழ்ச்சிகளில் இறங்கினர். தந்திரமாகத் தனித் தனியே அரசர்களைப் பிரித்தனர். சூழ்ச்சிகள் மலிந்தன இராஜதந்திரம் என்ற பெயரில்.

முடிவு? நாடு அவர்களுடையதே என்று ஆயிற்று. எங்ஙனம்? நேர்மையற்ற போர்கள் மூலம் நாடு மட்டுமா அவர்களுக்குக் கிடைத்தது? நேர்மையற்ற முறையில் செல்வம் குவிந்தது. கிளைவ் முதல் பின்வந்த கவர்னர்களைப் பற்றி வரலாறு கூறும்.

நம் நாட்டுத் தொழில்கள் ஆங்கில வாணிபத்திற்கு போட்டியாக இருந்தன. இதை பேராபத்தாகக் கருதினர் ஆங்கிலேயர். நம் கைத்தொழில்கள் அனைத்தும் ஈவிரக்க மின்றி நசுக்கப்பட்டன: கைவினைஞர் கடுந் தண்டனைக்கு உள்ளாயினர். இத்தண்டனை பெற்ற மஸ்வீன்’ துணி நெய்வோர் எத்தனை, எத்தனை! மற்றையோர் எத்தனை, எத்தனை! நினைக்க நினைக்க நெஞ்சம் இரத்தம் சிந்தாதோ!

இந்தியரே இந்தியரை வீழ்த்தி இந்திய நாட்டை அடிப் படுத்தினர் சாதி என்றனர். ஒரு சாதி மற்றொரு சாதியை வெறுத்தது; பகை கொண்டது; போரிட்டது; வீழ்த்தியது; மாற்றானுக்கு அடிமையும் படுத்தியது. ஆணவமும் அகங்காரமும் வேறென்ன செய்யும்!

1 47