பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்தர்ப்பத்தையும் சூழ்நிலையையும் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொண்டவருள் ஈடு இணையற்றவர் மார்க்விஸ் வெல்லஸ்லி சுதேச மன்னர்களைத் தம் பிடியில் வைக்கும் அருமையான திட்டமொன்றைத் தீட்டினார். அழகியதொரு பெயரையும் சூட்டினார்.

துணைப்படைத் திட்டம்

துணைப்படைத் திட்டம் என்றதே அப்பெயர். இத் திட்டத்தை ஏற்றுக்கொண்டவரைத் தம் பிடியில் வைத்து பொம்மையாக ஆட்டி வைத்தனர். ஏற்றுக் கொள்ளாத மன்னரை போரிலே அழித்தனர். இப்படி அழிக்கப்பட்டவரே மைசூர் புலி திப்பு சுல்தான். இது போன்ற அடாத செயல் களுக்கு மற்ற சுதேச இராச்சியங்களும் இலக்கியாயின.

போர் மூலமும், சூழ்ச்சி மூலமும் இந்தியாவைத் தம் வசமாக்கிக் கொண்டனர் ஆங்கிலேயர் என்று மட்டும் சொன்னால் அது பெரிய அபாண்டம்.

லார்ட் வில்லியம் பெண்டிங் போன்ற ஒருசில கவர்னர் ஜெனரல்கள் செய்த சீர்திருத்தங்களை மறத்தலாகாது. வில்லியம் பெண்டிங் என்று சொல்லும்போது, அவரது சீர்திருத்தங்களில் பெரும் பங்கு கொண்ட இராசாராம் மோகன்ராய் நினைவு கூடவே வரும்.

ஆங்கில அரசை விரிவுபடுத்தி ஸ்திரப்படுத்தியவர்களுள் வெல்லெஸ்லிக்கு அடுத்தபடியாக டல்ஹெளஸியைக் கூறலாம். ஆங்கில ஆட்சிக்குட்பட்டிருந்த மீதி சுதேச நாடுகள் இவர் கண்ணை உறுத்தின. இதற்கும் ஒரு யுக்தியைக் கையாண்டார். வாரிசு இல்லாத சுதேச அரசுகள் மீது பாய்ந்தார். நீங்கள் எடுத்துக் கொண்ட சுவீகாரம் செல்லாது!’ என்று ஒரேயடியாக மிச்சமிருந்த அரசுகளை நேரடியாக பிரிட்டிஷ் கொடியின் கீழ் கொண்டு வந்தவர். இந்திய மன்னர்கள் இதைக் கண்டனர். மக்கள் இதைக் கண்டனர். நொந்தனர்; செய்வது யாது என்று தீவிரமாக ஆலோசிக்க முற்பட்டனர்.

148