பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எத்தனை, எத்தனை! இதுவும் ஒரு அரசியல் பகடையாக அல்லவோ பயன்படுத்தப் படுகிறது!

இவ்வளவிலும் ஒரு விஷயம் மகிழ்ச்சி தருகிறது. அது தான் பெண்கள் நிலையில் ஏற்பட்டுள்ள சிறிது முன்னேற்றம்.

விடுதலை

இந்தியாவுக்கு விடுதலை நிச்சயம் வேண்டும். எத்தகைய விடுதலை? புற விடுதலை. அதாவது அரசியல் விடுதலை. அரசியல் விடுதலையின் அஸ்திவாரம் பொருளாதார விடுதலை. பொருளாதார விடுதலை வேண்டுமாயின், முக்கியமாகத் தேவை சேர்க்கை வாழ்க்கை. தனித்த வாழ்க்கையே இந்தியாவை முதல் முதல் அடிமைக் குழியில் வீழ்த்தியது. எனவே அது வேண்டற்பாலதன்று.

இரண்டாவதாக, உண்மையான விடுதலைக்கு சாதி பாகுபாடுகள் கூடாது. கற்றறிந்த சில சமய சஞ்சீவிகள் மனுஸ்மிருதியை திரித்து நாட்டைக் கெடுத்தனர். இன்று அவர்களே தாம் புகுத்திய ஏற்றத் தாழ்வுகளை சாதகமாக மாற்றிக்கொண்டு சாதிமுறை பிரதிநிதித்துவத்தை கேட்பது நாட்டைக் கூறு போடுவதாகும். இதே நிலை நீடிக்கு மானால், அறப்புரட்சி எழும்; அறப்புரட்சி மறப் புரட்சி யாக மாறாதபடி பார்த்துக் கொள்வது நம் கடன்.

சமய ஏற்றத் தாழ்வுகளை கலப்பு மணங்கள் மூலம் ஒரளவு குறைக்கலாம். இந்த வேற்றுமை விஷ வித்துக்கள் மேலே பரவாமல் தடுக்கலாம்.

ஆனால்'இந்து முஸ்லீம் வேற்றுமையை இவை மட்டுமே களையுமா? முஸ்லீம் லீக் என்று ஒன்றும், ஹிந்து மகாசபை என்றும் இரண்டும் ஏன்? காங்கிரஸிலேயே இது இருப்பின், அது வகுப்பு வாதங் கடந்த அமைப்பாக எவ்வாறு கொள்வது? சிந்தியுங்கள்.

வேலியே பயிரை மேய்ந்தால் பயிர் செழிக்குமா? ‘எல்லோரும் ஒர் குலம்; எல்லோரும் ஒர் இனம். எல்லோரும்

I 53